ரெனோ க்விட் காருக்கு போட்டியாக புதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி!

Written By:

இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பொதுவாக மாருதி கார்களை பெஞ்ச் மார்க் மாடலாக வைத்தே பிற நிறுவனங்கள் கார்களை களமிறக்கும். வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்துமே மாருதி கார்களை குறிவைத்தே செய்யப்படுவது வழக்கம்.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

இந்த நிலையில், இந்திய கார் மார்க்கெட்டின் காட்சிகள் வெகுவாக மாறி வரும் இச்சூழலில், ரெனோ க்விட் காரை குறிவைத்து புத்தம் புதிய பட்ஜெட் கார் மாடலை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

ரெனோ க்விட் காரை போன்றே, இது க்ராஸ்ஓவர் ரகத்திலான பட்ஜெட் கார் மாடலாக இருக்கும். அதாவது, எஸ்யூவி தாத்பரியங்களுடன் கூடிய விலை குறைவான கார் மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

ரெனோ க்விட் காரால் ஆல்ட்டோ காரின் விற்பனை பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதி, ரெனோ க்விட் காரை குறிவைத்து இந்த மாடலை வடிவமைத்து வருகிறது மாருதி கார் நிறுவனம்.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

இந்த குறைவான விலை க்ராஸ்ஓவர் கார் வந்தாலும் ஆல்ட்டோ கார் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். இந்த செக்மென்ட்டில் தனது பலத்தை வலுவூட்டிக் கொள்வதற்காகவே புதிய மாடலை மாருதி களமிறக்க உள்ளது.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய மாருதி கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட் கார் போன்றே, அதிக தரை இடைவெளி கொண்ட மாடலாகவும் இருக்கும்.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

ஆல்ட்டோ காரில் பயன்படுத்தப்படும் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் இந்த புதிய காரிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. 5 ஸபீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும்.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் புதிய மாருதி கார்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட நவீன சாதனங்கள், கவர்ச்சிகரமான இன்டீரியர் டிசைனுடன் இந்த கார் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட் காருக்கு மிக சவாலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Maruti's rival for the Renault Kwid is expected to debut at the 2018 Auto Expo. New car will sell alongside Alto.
Story first published: Wednesday, February 15, 2017, 11:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark