மாருதிசுசுகியின் புதிய ஆல்டோ கே10 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்

Posted By: Staff

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டாக உள்ள மாருதிசுசுகி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் நம்பிக்கையை ஆழமாகப் பெற்று வளர்ந்துள்ளது. 1981ஆம் ஆண்டு 'மாருதி800' என்ற மாடலுடன் தனது பயணத்தை ஆரம்பித்து, இன்று நவீன கால மாற்றங்களுக்கு இணங்க சியாஸ், பிரஸ்ஸா, ஆல்டோ, இக்னிஸ், பலினோ என மக்களின் விருப்பத்தை பெற்ற மாருதி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான கார் நிறுவனமாக விளங்கிவருகிறது.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

வாழ்க்கையில் ஒருமுறையாவது கார் வாங்கி விட வேண்டும் என்றிருந்த பல லட்சம் நடுத்தர குடும்பத்தினரின் கனவை நிறைவேற்றியதில் மாருதியின் பங்கு கணிசமானது. இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகிற கார் என்ற பெருமையை மாருதி சுசுகியின் ஆல்டோ கார் பிடித்துள்ளன.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

தற்போது ஆல்டோ காரின் லிமிடட் எடிஷன் மாடலான ஆல்டோ கே10 பிளஸ் காரை 10 புதிய சிறப்பம்சங்களுடன் மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

புதிய ஆல்டோ கே10 பிளஸ் விஎக்ஸ்ஐ என்ற டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சில குறிப்பிட்ட மாறுதல்கள் பெற்றிருக்கிறது. புதிய ரியர் ஸ்பாய்லர்கள், ஃபாக் லைட்டுகள், கிரோம் பெல்ட்லைன், டோர் மோல்டிங், வீல் ஆர்ச்சுகள் உள்ளன.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

மேலும் பாடி கலரில் கதவு கைப்பிடிகள் மற்றும் வெளிப்புற ரியர் வியூ மிர்ரர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவயும் தரப்பட்டுள்ளன.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

புதிய லிமிடட் எடிஷன் ஆல்டோ கே10-ல் செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்புற பவர் விண்டோக்கள் மற்றும் பியாவோ வடிவ ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

வெளிப்புறத்தில் பல மாறுதல்கள் கண்டாலும் இதில் இயந்தரவியல் மாற்றங்கள் ஏதும் இல்லை. முந்தைய ஆல்டோவில் உள்ளதைப் போன்றே 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் இதில் உள்ளது. இது அதிகபட்சமாக 67 பிஹச்பி ஆற்றலையும் 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

இஞ்சினின் ஆற்றல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷனலாகவும் கிடைக்கிறது.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

இவை டேங்கோ ஆரஞ்சு, நீலம், கிரானைட் கிரே, சிவப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என 6 வண்ணங்களில் கிடைக்கிறது. 3,545 மிமீ நீளம், 1.515 மிமீ அகலம், 1,475 மிமீ உயரம் உள்ள ஆல்டோ 2.360 மிமீ வீல் பேஸ் கொண்டதாகும்.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் புதிய ஆல்டோ கே10 பிளஸ்-ன் விலை 3.40 லட்ச ரூபாயாகும். (டெல்லி எக்ஸ் ஷோரூம்). இவை எல்பிஜி ஃபிட்டிங்கிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதியின் புதிய லிமிடட் எடிசன் ஆல்டோ கார் அறிமுகம்

இந்திய கார் சந்தையில் பாதியளவுக்கும் அதிகமான பங்கை மாருதிசுசுகி நிறுவனமே அளித்து வருகிறது. நடுத்தரவர்க்கத்தினருக்கு ஏற்ற வகையில் தரமான கார்களை அளித்து வருவதே இந்நிறுவனத்தை முன்னோடியாக உயர வைத்துள்ளது. ஆல்டோ கார்கள் ரெனோ க்விட் கார்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Maruti Suzuki Alto K10 Plus Edition Launched In India

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark