மாருதிசுசுகியின் பலினோ கார் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெறக் காரணம் என்ன?

Posted By: Staff

இந்தியாவின் நம்பர்-1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதிசுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ரக பலினோ கார் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

மாருதிசுசுகியின் பிரீமியம் ஹேட்பேக் ரக மாடலான பலினோ கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

அறிமுகமான ஒரு வருடத்திற்குள்ளாகவே 1,00,000 பலினோ கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியிருந்தது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

தற்போது மாருதி பலினோ கார் அறிமுகம் ஆகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் விற்பனையில் 2,00,000 என்ற புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

கடந்த மே மாத நிலவரப்படி மாருதி பலினோ காரின் அதிகாரப்பூர்வ விற்பனை எண்ணிக்கை 1,97,660 ஆக இருந்தது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

மாருதியின் மற்றொரு பிரீமியம் ரக மாடலான எஸ்-கிராஸ் எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத நிலையில், சராசரியாக மாதம் ஒன்றிற்கு 16,000 பலினோ கார்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

விற்பனையில் தனது உடன்பிறப்புகளான ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் வேகன்-ஆர் மாடல்களை முதல்முறையாக முந்தியுள்ள பலினோ, கடந்த மார்ச்சில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் டாப்-10 பட்டியலில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது மாருதியின் பலினோ பிரீமியம் ஹேட்ச்பேக்.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

கடந்த மார்ச் 2017ல், பலினோ-வின் ஸ்போர்ட்ஸ் வேரியண்டான புதிய பலினோ-ஆர்எஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பலினோவின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

புதிய பலினோ-ஆர்எஸ் காரின் உற்பத்தி குஜராத்தில் உள்ள அந்நிறுவனத்தின் புதிய மனேசர் தொழிற்சாலையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

மாருதி பலினோ 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இரண்டு இஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 83 பிஹச்பி ஆற்றலையும் 115 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றல் இதன் பின்சக்கரங்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் செலுத்தப்படுகிறது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

1.3 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 74 பிஹச்பி ஆற்றலையும் 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் பின்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

சமீபத்திய அறிமுகமான பலினோ ஆர்எஸ் வேரியண்டில் 1.0 லிட்டர் பூஸ்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 100.5 பிஹச்பி ஆற்றலையும், 150 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

மாருதி பலினோ கார் எட்டிய புதிய உச்சம்..!!

மாருதி பலினோ கார்கள் ரூ. 7.05 லட்சம் முதல் 8.69 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

English summary
Read in Tamil about maruti baleno acheives new milestone in sales

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark