மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

Written By:

கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி செலிரியோ கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது. பட்ஜெட் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாகவும் மாறியது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் காராகவும் வந்தததால் சிறப்பான வரவேற்பை பெற்றது.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இந்த நிலையில், சில காலம் கழித்து 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட செலிரியோ காரை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.மாருதி நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் உருவான புதிய 800சிசி டீசல் எஞ்சின் மாருதி செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டது.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

சிறிய வகையிலான இந்த டீசல் எஞ்சின் 47 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக வந்தது. அத்துடன், லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று மாருதி நம்பியது.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்க்கும் விதத்தில், மாருதி செலிரியோ காரின் டீசல் மாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. மிக குறைவான திறன் கொண்டிருந்ததே இதற்கு காரணமாக மாறியது.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

அத்துடன், சிறிய எஞ்சின் என்பதால் சப்தமும், அதிர்வுகளும் மிக அதிகமாக இருந்தது. பாரத்துடன் பயணிக்கும்போது திணறல் அதிகமாக இருந்ததாக வாடிக்கையாளர்கள் மத்தியில் கருத்து எழுந்தது. அத்துடன், பெட்ரோல், டீசல் விலைகளுக்கு இடையிலான வித்தியாசமும் குறைந்ததால், பெட்ரோல் மாடல் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திருப்பினர்.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இந்த நிலையில், டிமான்ட் இல்லாததால், செலிரியோ டீசல் காரின் விற்பனையை மாருதி நிறுத்தி உள்ளதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தின், இணைய பக்கத்தில் இருந்து மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் எடுக்கப்பட்டுவிட்டது.

 மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இதனால், செலிரியோ டீசல் கார் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. நீண்ட காலமாகவே, ஃபியட் நிறுவனத்திடமிருந்து 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி கார் நிறுவனம் பெற்று பல முன்னணி மாடல்களில் பொருத்தி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்கள்!

இளைய சமுதாயத்தினரை கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரிக்கு சென்று காணலாம்.

English summary
The noise, vibration and harshness (NVH) levels of the Maruti Celerio diesel model has been reported as high.
Story first published: Saturday, February 4, 2017, 15:54 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos