ரூ. 9.39 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியானது..!!

Written By:

மாருதி சுசுகியின் சியாஸ் செடான் காரில் புதியதாக தயாராகியுள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

சியாஸ் எஸ் என்ற பெயரில் மாருதி சுசுகி வெளியிட்டுள்ள இந்த புதிய மாடல் கார் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

எக்ஸ்-ஷோரூம் மதிப்புப்படி சியாஸ் எஸ் பெட்ரோல் மாடல் கார் ரூ.9.39 லட்சம் விலை பெறுகிறது.

அதேபோல, டீசல் மாடலுக்கு ரூ.11.55 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

தற்போதுள்ள மாடலை விட இந்த ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றத்தில் பல்வேறு அழகூட்டப்பட்ட வேலைபாடுகள் அரங்கேறியுள்ளன.

சியாஸ் எஸ் காருக்கு ஸ்போர்ட்ஸ் மாடல் தோற்றம் வரவேண்டும் என்பதால் சக்கரங்கள் மிகவும் மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

மேலும் அதே தோற்றத்திற்காக ஸ்போர்டியர் பம்பர்கள், ரியர் ஸ்பாய்லர், சைடு ஸ்கெர்ட்ஸ் போன்றவை சியாஸ் எஸ் தோற்றத்திற்கு ஒரு முரட்டு வலிமையை சேர்க்கின்றன.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

டாப்-என்டு ஆல்ஃபா வேரியாண்ட் மாடலை பின்பற்றி புதிய சியாஸ் எஸ் காரை மாருதி சுசுகி தயாரித்துள்ளது. சாம்பல் நிறத்திலான உள்கட்டமைப்புகளில் பிடிமானம் மற்றும் அவுட்லைன்கள் கிரோம் கொண்டு இழைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

சாம்பல் நிறத்திற்கு ஏற்றவாறு காரின் இருக்கைகள் கருப்பு நிறத்தில் உள்ளன. இது போன்ற தோற்றப் பொலிவுகள் காரை ஒரு ப்ரீமியம் தரத்திற்கு உணரவைக்கின்றன.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

சியாஸ் எஸ் காரின் பெட்ரோல் மாடலில் நான்கு சிலிண்டர் கொண்ட 1373 திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இது 91 பிஎச்பி பவர் மற்றும் 130 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

அதேபோல டீசல் மாடல் காரி 1248சிசி திறன் பெற்ற நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இது 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

இந்தியாவில் சியாஸ் மாடல் கார் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு என்றும் ஒரு நிலையான பிரபலத்துவமிக்க மாடலாக வலம் வருகிறது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

தற்போது இதே மாடலில் வெளிவரும் சியாஸ் எஸ்செடான் கார் தற்போது இளைஞர்களை குறி வைத்து களம் காணவுள்ளது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

தனக்கான வாடிக்கையாளர்கள் வட்டத்தை பெருக்கிக்கொள்ள் மாருதி சுசுகி செய்யும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் வெளியீடு!

சியாஸ் எஸ் மாடலின் தோற்றம் மற்றும் செயல்திறன் நிச்சயம் அதற்கான பங்கை இந்திய சந்தையில் உருவாக்கும் என நாமும் நம்பலாம்.

English summary
Read in Tamil: Maruti Suzuki Ciaz S sportier version launched in India. Click for its Price, Specification, engine and More...
Story first published: Thursday, August 17, 2017, 15:01 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos