சியாஸ் -RS மாடல்களின் விற்பனையை நிறுத்துகிறது மாருதி சுசுகி?

ஹோண்டா சிட்டி மாடல் கார்களுக்கு போட்டியாக கருதப்படும் சியாஸ்-RS மாடல் கார்களின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் நிறுத்துவதாக தெரிகிறது. அது குறித்த செய்தியை காணலாம்.

By Super Admin

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தால் கடந்த 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது சியாஸ் மாடல் கார்கள், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் வாடிக்கையாளைகளை கவர பிரத்யேக அம்சங்களை புகுத்தி 2015ல் வெளிவந்தது சியாஸ் -RS மாடல், வெளிவந்த புதிதில் Mid Range Sedan வகை கார்களில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு போட்டியாகவும் இது கருதப்பட்டது.

சியாஸ் -RS கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்?

பார்வைக்கு அட்டகாசமான Muscular Sporty look தோற்றத்துடனும், காற்றை கிழித்துச் செல்ல உதவும் ரியர் ஸ்பாய்லர்களை கொண்டதோடு, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மாற்றியமைக்கப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள், உட்புறத்தில் மிகவும் சவுகரியம் வாய்ந்ததாகவும், நவீன பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும் சியாஸ்- RS மாடல் உள்ளது.

சியாஸ் -RS கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்?

இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் சியாஸ் -RS மாடல் கார்களின் விற்பனையை நிறுத்தியிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகாத நிலையில் அந்நிறுவனத்தின் வெப்சைட்டிலிருந்து சியாஸ் -RS மாடல் நீக்கப்பட்டுள்ளது.

சியாஸ் -RS கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்?

நடப்பாண்டில் புதிதாக 9 மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதால், சியாஸ் -RS மாடல் நீக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சியாஸ் -RS கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்?

இதன் விலை, பெட்ரோல் மாடல் ரூ. 9.20 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ரூ. 10.28 லட்சத்திலிருந்தும் தொடங்குகிறது, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட சியாஸ் - RS, 7 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மாருதியின் பிரத்யேக நெக்ஸா ஷோரூம்களில் தற்போது கையிருப்பில் உள்ள சியாஸ் -RS மாடல் கார்கள் மட்டும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாஸ் -RS கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்?

சியாஸ் - RS விற்பனை நிறுத்தப்பட்டாலும், ரெகுலர் மாடலான சியாஸ் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை.

புதிய 2017 மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்:

Most Read Articles
English summary
Maruti Suzuki has discontinued the top-of-the-line model Ciaz RS from it sedan lineup in India.
Story first published: Wednesday, February 15, 2017, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X