மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்று இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் தற்போதைய சிறப்பு பதிப்பு மாடல் எக்கொயஸ்டிக் மெரூன் என்ற பிரத்யேக வண்ணத்தில் வந்துள்ளது. இதுதவிர, புதிய டிசைனிலான அலாய் வீல்கள், பனி விளக்குகளை சுற்றி க்ரோம் பட்டையுடன் அலங்காரம் கவர்கிறது. பக்கவாட்டில் கதவுகளில் க்ரோம் சட்டம் ஒன்றும் பதிக்கப்பட்டு கவர்ச்சி கூட்டப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இன்டீரியரிலும் அலங்கார வேலைப்பாடுகள் மூலமாக பிரிமியம் மாடலாக காட்சியளிக்கிறது. சென்டர் கன்சோலில் பளபளப்பு மிகுந்த பழுப்பு வண்ண தகடுகள் இருபுறமும் பதிக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பிரிமியம் சீட் கவர்கள், மர அலங்கார தகடுகளுடன் வேலைப்பாடுகள், இரட்டை வண்ண ஸ்டீயரிங் வீல் கவர், மெல்லிய ஒளியை வழங்கும் ஆம்பியன்ட் லைட்டுகள், தலையணைகள் என இன்டீரியரில் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் கார் ரூ.7.85 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகள்தான் வாடிக்கையாளர்களால் விரும்பி தேர்வு செய்யப்படுகின்றன. இந்த வேரியண்ட்டுகள் தற்போது கூடுதல் அம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் கிடைப்பது நிச்சயம் கூடுதல் கவனத்தை பெறும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Indian automaker Maruti Suzuki has launched the Limited Edition Ertiga with cosmetic updates on the exterior and the interior of the MPV.
Story first published: Thursday, February 16, 2017, 11:39 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark