இந்தியாவில் அடுத்தடுத்து களமிறங்கும் புதிய எஸ்.யூ.வி கார்கள்: மாருதி சுசுகி அதிரடி திட்டம்..!!

Written By:

மாருதி சுசுகி-யின் விட்டாரா பிரஸ்ஸா கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் குஷியான அந்நிறுவனம் விரைவில் பல புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை சந்தையில் களமிறக்கவுள்ளது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ET Auto இணையதளம், மாருதி தயாரிக்கவுள்ள புதிய எஸ்.யூ.வி கார் டாடா ஹெக்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி கார்களுக்கு போட்டியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

விட்டாரா பிரஸ்ஸா காரின் அளவிற்கு சிறியதான கார்களுக்கு சந்தையில் நிலவரம் என்ன என்பதை மாருதி சுசுகி ஆராய்ந்து வருகிறது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

இதுகுறித்து பேசிய நிர்வாக அதிகாரி கென்னிசி ஆயூகாவா, எஸ்.யூ.வி கார்களுக்கு இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளை மாருதி சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என தெரிவித்தார்.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

ஆனால் சந்தை நிலவரப்படி இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எஸ்.யூ.வி கார்களை தான் விரும்புகிறார்கள். அதற்கு தான் இங்கே பெரிய சந்தையும் உள்ளது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

கடந்த மார்ச் 21, 2017 வரையிலான நிதி ஆண்டை பார்த்தால், இந்தியாவில் பல நிறுவனங்கள் தயாரித்த எஸ்.யூ.வி மாடல் கார்கள் 30 சதவீத அளவில் விற்பனை ஆகியுள்ளன.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

மாருதி-சுசுகி நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை அளவுகோளை கொடுத்தது விட்டாரா பிரஸ்ஸா தான்.

மார்ச் வரை இந்தியாவில்சுமார் 1,95,741 விட்டாரா பிரஸ்ஸா கார் விற்பனையாகியுள்ளன.

இதன்மூலம் கடந்த் நிதியாண்டில் மாருதியின் எஸ்.யூ.வி கார் விற்பனை இந்தியாவில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

மாருதி சுசுகியின் புதிய எஸ்.யூ.வி காரின் அறிவிப்புகள் வெளிவந்திருந்தாலும், அவை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தாலே அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

5வது தலைமுறைக்கான எஸ்.யூ.வி மாடலை வைத்து புதிய மாருதி எஸ்.யூ.வி கார் உருவாகவுள்ளதாகவும். அதனுடைய உற்பத்தியே 2020ல் தான் ஆரம்பிக்கும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

ரெனால்ட் கிவிட் காருக்கு போட்டியாக மாருதி சுசுகி 2019ம் ஆண்டில் எஸ்.யூ.வி ஸ்டைலில் புதிய ஹேட்ச்பேக் காரை வெளியிடுகிறது.

புதிய மாடல் எஸ்.யூ.வி கார்களை வெளியிட மாருதி சுசுகி முடிவு!

இதேபோல பல புதுமையான தனித்துவமான வடிவமைப்புகளுடன் கூடிய கார்களை தயாரிக்க மாருதி சுசுகி பலநோக்கில் செயல்பட துவங்கியுள்ளது.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Maruti Suzuki Plans To Introduce More SUVs In India. Click for Details...
Story first published: Saturday, June 3, 2017, 15:51 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark