Subscribe to DriveSpark

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு இமாலய புக்கிங்!

Written By:

காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது இதனை மனதில் வைத்து மாருதி நிறுவனம் களமிறக்கிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி எகிடுதகிடான வரவேற்பை பெற்றிருக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 11 மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவை பெற்றிருக்கிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. மாதத்திற்கு சராசரியாக 9,000 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனை என்ற அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

உற்பத்தியை கூட்ட முடியாத நிலை இருப்பதால், வேரியண்ட்டை பொறுத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு அதிகபட்சமாக 7 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெரும் வெற்றியை ருசித்திருப்பதற்கு முக்கிய காரணம் விலை நிர்ணயம்.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அடக்க வகை கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மாறி உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடலில் மட்டும் கிடைக்கிறது.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

இந்த காரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதற்கு லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வரை தரும் என்பதும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 198மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதனால், எந்தவொரு சாலை நிலையையும் எளிதாக எதிர்கொள்ளும்.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

இந்த எஸ்யூவியில் 378 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. போட்டியாளர்களைவிட சிறப்பான பூட்ரூம் இடவசதியை கொண்டிருப்பதும் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையான மாடலாக மாறி இருக்கிறது.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

டாப் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் மாருதி கார் நிறுவனம் வழங்குகிறது.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

இருளை கண்டுணர்ந்து தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், மழையை கண்டுணர்ந்து இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோட்யின்மென்ட் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு 2 லட்சம் புக்கிங்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், பேஸ் மாடலில் ஓட்டுனருக்கான ஏர்பேக்கும் வழங்கப்படும். டாப் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரூ.8.43 லட்சம் என்ற சென்னை ஆன்ரோடு விலையில் இருந்து கிடைக்கிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

English summary
Maruti Suzuki's successful compact SUV, the Vitara Brezza has achieved another milestone, it has garnered a whopping 2 lakh bookings in just 11 months.
Story first published: Saturday, January 28, 2017, 9:55 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark