மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Written By:

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பான பட்ஜெட் விலை கார் மாடல் மாருதி வேகன் ஆர். அதிக வசதிகள், சரியான விலை, குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இந்த காருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்து வருகிறது.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரம் போன்ற தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மாருதி வேகன் ஆர் காரில் விஎக்ஸ்ஐ+ என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி ஸ்டிங்ரே காரில் இருந்த க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன. அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகளும் புதிய விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

திய மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்டில் இரட்டை வண்ண இன்டீரியரில் பியானோ பிளாக் என்ற பளபளப்புமிக்க கருப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்டீரியர் மிகவும் பிரிமியமாக காட்சி தருகிறது.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதுதவிர, விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஆப்ஷனலாக வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து தேர்வு செய்து கொள்ளலாம்.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர அம்சம் கொண்ட 1.0 லிட்டர் கேபி10பி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி எனப்படும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த கார் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கிடைக்கும் வண்ணங்கள் தவிர்த்து தற்போது நீல வண்ணமும் மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய மாருதி வேகன் ஆர் காரின் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்டின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை கீழே உள்ள விலைப் பட்டியல் அட்டவணையில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
விஎக்ஸ்ஐ+ மேனுவல் ரூ.4.69 லட்சம்
விஎக்ஸ்ஐ+ [O] மேனுவல் ரூ.4.89 லட்சம்
விஎக்ஸ்ஐ+ ஏஎம்டி ரூ.5.17 லட்சம்
விஎக்ஸ்ஐ+ ஏஎம்டி (O) ரூ.5.36 லட்சம்

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

English summary
Maruti WagonR VXi+ launched in India. The new WagonR is available with both manual and AMT gearboxes.
Please Wait while comments are loading...

Latest Photos