புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

Written By:

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் ஜிடி ரோட்ஸ்டெர் கார் மற்றும் ஜிடி ஆர் கார்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளன. இதில், ஏஎம்ஜி ஜிடிஆர் காரின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் பல வேக சாதனைகளை படைத்த கையுடன் இந்தியா வந்துள்ளது. ஆம், உலகின் மிக சவாலான ரேஸ் டிராக்குகளில் ஒன்றான நர்பர்க்ரிங் பந்தய களத்தை அதிவேகத்தில் கடந்த ரியர் வீல் டிரைவ் கார் என்ற பெருமையை இது பெற்றது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

இதைத்தொடர்ந்து, அண்மையில் டெல்லி அருகே நொய்டாவவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் ஃபார்முலா கார் பந்தய களத்தை அதிவேகத்தில் கடந்து சாதனையையும் புரிந்தது. இந்த கார் வெறும் 2 நிமிடங்கள் 9.853 வினாடிகளில் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் ஒரு சுற்றை கடந்து சாதனை படைத்தது. இந்த சாதனையை படைத்த க்ரிஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

இந்த சக்திவாய்ந்த காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

இந்த கார் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் கடந்துவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 316 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த காரில் ரியர் வீல் ஸ்டீயரிங் அமைப்பும் உடையது என்பது கூடுதல் சிறப்பு.

Recommended Video
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

பந்தய கார் மாடலான ஜிடி3 காரில் இருப்பது போன்றே, இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் 9 நிலைகளில் மாற்றும் சிறப்பு கொண்ட ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

இந்த கார் ஜிடி எஸ் கார் மாடலைவிட 15 கிலோ எடை குறைவானது. கார்பன் ஃபைபர் கூரை கொடுக்கப்பட்டிருப்பதும், டைட்டானியம் புகைப்போக்கி அமைப்பும் இந்த காரின் கூடுதல் சிறப்புகளாக கூறலாம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

ஏஎம்ஜி ஜிடி3 காரில் இருக்கும் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷனில் பல்வேறு மாற்றங்களை செய்து, இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, முன்புறத்தில் ஸ்பிளிட்டர், இரட்டை டிபியூசர்கள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் போன்றவை இந்த காரின் கூடுதல் சிறப்புகளாக இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜிடி எஸ் காரைவிட, பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றஇருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்குரிய விசேஷ இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், நப்பா லெதர் இருக்கைகளும் காரின் மதிப்புக்கு மதிப்பு கூட்டுகிறது. மேலும், வாடிக்கையாளர் விருப்பப்படி, இன்டீரியரில் மஞ்சள் வண்ண ஆக்சஸெரீகள் மூலமாக அலங்கரித்து கொள்ளலாம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் கார் இந்தியாவில் அறிமுகம்- முழு விபரம்!

ரூ.2.23 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Mercedes AMG GT R launched in India. The 2017 Mercedes AMG GT R is priced at Rs 2.23 crore, ex-showroom (India).
Story first published: Monday, August 21, 2017, 14:27 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos