மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

Written By:

உலகின் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிடி காரின் இரண்டு மாடல்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டின் பொன் விழாவை கொண்டாடும் விதத்தில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதில், முதலாவதாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ரோட்ஸ்டெர் மாடலின் சிறப்புகள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம். அடுத்த செய்தியில் ஏஎம்ஜி ஜிடிஆர் காரின் விபரங்களை காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ரோட்ஸ்டெர் மாடலானது ஏஎம்ஜி ஜிடி ஸ்போர்ட்ஸ் காரின் குறைவான விலை ரோட்ஸ்டெர் என்ற திறந்து மூடும் கூரை அமைப்பு கொண்ட மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

இந்த காரின் முகப்பில் மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. 1950 களில் மெக்ஸிக்கோவில் நடந்த பான் அமெரிக்கா கார் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்ட 300எஸ்எல் காரின் க்ரில் அமைப்பை மனதில் கொண்டு இந்தபுதிய க்ரில் அமைப்பை வடிவமைத்துள்ளனர். இந்த க்ரில் அமைப்பில் மூலமாக எஞ்சின் குளிர்விப்பதற்கான வசதியும் உள்ளது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

இந்த கார் நின்ற நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4 வினாடிகளே போதுமானது. அதிகபட்சமாக 302 கிமீ வேகம் வரை செல்வதற்கான வல்லமையையும், கட்டுமானத்தையும் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

ஜிடி3 பந்தய காரில் பயன்படுத்தப்படும், டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பில் பல மாற்றங்களை செய்து இந்த காரில் பயன்படுத்தி உள்ளனர். இதனால், இதன் செயல்திறனை வெகு லாவகமாக இந்த சஸ்பென்ஷன் அமைப்பு கையாளும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

இந்த காரின் கூரையை வெறும் 11 வினாடிகளில் மூடவும், திறக்கவும் முடியும். இந்த கூரையின் ஃப்ரேம் அலுமினியிம், ஸ்டீல் மற்றும் மெக்னீசியம் ஆகிய கலப்பு உலோக கலவையில் தயாரிக்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

கருப்பு, சிவப்பு மற்றும் பீஜ் ஆகிய மூன்று வண்ண தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது!

ரூ.2.19 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ரோட்ஸ்டெர் கார். ஜிடி வரிசையில் குறைவான விலை மாடல் என்பது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது.

English summary
Mercedes AMG GT Roadster launched in India. The new Mercedes AMG GT Roadster is priced at Rs 2.19 crore ex-showroom (India).

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark