1,000 பிஎச்பி சக்தியுடன் மிரட்டும் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஹைப்பர் கார் அறிமுகம்!

Written By:

உலகம் முழுவதும் கார் ஆர்வலர்களின் ஆவலைத் தூண்டிய புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் படங்களையும், அதிகாரப்பூர்வ தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

மெர்சிடிஸ்- ஏஎம்ஜி பிராண்டின் முதல் ஹைப்பர் கார் மாடல் புராஜெக்ட் ஒன். 1,000 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஹைப்ரிட் நுட்பத்திலான ஹைப்பர் கார் மாடலாக வந்துள்ளது. ஃபார்முலா-1 கார் எஞ்சினின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு அதிசக்திவாய்ந்த எஞ்சின் இந்த காரில் பொருத்தப்பட்டு இருப்பதுதான் இந்த காரின் ஆகச்சிறந்த அம்சம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

மெர்சிடிஸ் நிறுவனம் தனது w08 ஃபார்முலா -1 கார்களில் பயன்படுத்தும் 1.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினில் மாறுதல்களை செய்து இந்த காரில் பொருத்தி இருக்கிறது. இந்த எஞ்சினின் க்ராங்சாஃப்டிலேயே எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து 670 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

இவை தவிர்த்து, முன்சக்கரங்களில் தலா ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு எலக்ட்ரிக் மோட்டாரும் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

பெட்ரோல் எஞ்சின் மற்றும் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக அதிகபட்சமாக 1,000 பிஎச்பி திறனுக்கும் மேல் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த கார் இது. அதிகபட்ச திறன் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் ட்யூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பிக்கப் மிரள வைக்கிறது. இந்த கார் 0 -200 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும் என்று மெர்சிடிஸ் - ஏஎம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும்.

1,000 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த இந்த ஹைப்பர் கார் வெறும் 1,000 கிலோ மட்டுமே எடை கொண்டது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

எனவே, சக்தியை வெளிப்படுத்தும் திறனுக்கும், எடைக்குமான விகிதாச்சாரம் 1:1 என்ற அளவில் இருப்பதும் இதன் செயல்திறன் சிறப்பாக இருப்பதற்கு காரணம். மேலும், இதன் காரணமாகவே, புராஜெக்ட் ஒன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரின் வடிவமைப்பு மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே ஜிடிஆர் காரின் தாத்பரியங்களை பெற்றஇருக்கிறது. பட்டர் ப்ளை கதவுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. கூரையில் இந்த காரின் ஏர் இன்டேக் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் தனித்துவமானது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

இதன் இன்டீரியர் பெரிய ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாகவும், வழக்கமான ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பது போலவும் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சின் இயக்கம் உள்ளிட்ட கார் இயக்கம் பற்றிய அனேக தகவல்களை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மூலமாக தெரிந்து கொள்ளலாம். இதன் ஸ்டீயரிங் வீலும் ஃபார்முலா-1 கார்களை ஒத்திருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

ஃபார்முலா-1 கார்களில் இருப்பது போன்ற மிகச் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த கார் அதிவேகத்தில் நிலைகுலையாமல் செல்வதற்கு இந்த மல்டி லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு உதவும்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர் கார் அறிமுகம்- முழு விபரம்!

மொத்தமாக 275 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் ஹைப்பர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைத்து கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்து போய்விட்டதால், வாடிக்கையாளர்கள் இனி மெனக்கெடும் வாய்ப்பு இல்லை. இந்திய மதிப்பில் ரூ.17.5 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளது.

English summary
Mercedes-AMG Project One Hyper Car Revealed In Frankfurt Motor Show.
Story first published: Tuesday, September 12, 2017, 17:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark