பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஹைப்பர் கார்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வெளிவர இருக்கும் புதிய ஹைப்பர் கார் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

By Saravana Rajan

புதிய ஹைப்பர் கார் மாடலை பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

ஃபார்முலா ஒன் காரின் அடிப்படையில் புத்தம் புதிய ஹைப்பர் ரக கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வெளிவர இருக்கும் இந்த புதிய ஹைப்பர் கார் விரைவில் அறிமுகவாதன் முன்னோட்டமாக இப்போது டீசர் படம் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

தற்போது மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் என்ற பெயரில் குறிக்கப்படும் இந்த புதிய ஹைப்பர் காருக்கான டீசரின் மூலமாக சில டிசைன் அம்சங்களை பார்க்க முடிகிறது. யு வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புற க்ரில் அமைப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவும், முன்புற பம்பரில் ஏஎம்ஜி லோகோ இடம்பெற்றிருப்பது இந்த டீசர் மூலமாக தெரிய வருகிறது.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

இந்த கார் ஹைப்ரிட் எனப்படும் இரட்டை எரிசக்தி நுட்பத்தில் வெளிவர இருக்கிறது. இந்த கார் 1,000 பிஎச்பி பவருக்கு மேல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மணிக்கு 350 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

மெர்சிடிஸ் டபிள்யூ08 இக்யூ பவர் ப்ளஸ் ஃபார்முலா ஒன் காரில் பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மாற்றங்களை செய்து இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் எலக்ட்ரிக் டர்போசார்ஜர்கள் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக நிமிடத்திற்கு 11,000 முறை சுழலும் திறனுடன் இந்த எஞ்சின் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார்களில் மட்டும் செலுத்தும்போது 30 கிமீ தூரம் வரை பயணிக்கும். தினசரி பயன்பாட்டிற்கும், ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற கார் மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

இந்த கார் இரண்டு இருக்கைகள் கொண்ட ஹைப்பர் மாடலாக வருகிறது. மொத்தமாக 275 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது.

1,000 பிஎச்பி பவருடன் மிரட்ட வருகிறது புதிய மெர்சிடிஸ் ஹைப்பர் கார்!

மெக்லாரன் பி1, ஃபெராரி லாஃபெராரி உள்ளிட்ட மாடல்களுடன் இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி புராஜெக்ட் ஒன் கார் போட்டி போடும்.

Most Read Articles
English summary
German carmaker Mercedes has confirmed that the Formula One derived Project One hypercar will debut at the 2017 Frankfurt Motor Show.
Story first published: Saturday, September 2, 2017, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X