மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஏஎம்ஜி பிராண்டில் சக்திவாய்ந்த புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே என்ற புதிய காரை இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிஸ் மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4 மேட்டிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்யூவி மற்றும் கூபே ரக காரின் டிசைன் தாத்பரியங்களின் கலவையாக உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரகத்திலான இந்த புதிய மாடல் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்40ஐ மாடலுக்கு நேர் போட்டியாக நிலை நிறுத்தப்பட்டது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் மாடல் இது. டிசைனில் மிகவும் தனித்துவமான இந்த கார் தற்போது இந்தியாவில் ஜிஎல்சி க்ளாஸ் எஸ்யூவி குடும்பத்தின் விலை உயர்ந்த மாடலாக வந்துள்ளது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் பை- டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 367 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விசேஷமான 4- மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக எஞ்சின் சக்தி முன் ஆக்சிலுக்கு 31 சதவீதமும், பின் ஆக்சிலுக்கு 69 சதவீதமும் செலுத்தப்படும். இந்த காரில் 9ஜி ட்ரோனிக் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் ஏஎம்ஜி நிறுவனத்தின் டைனமிக் செலக்ட் சிஸ்டம் என்ற விசேஷ தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதன்மூலமாக, ஓட்டுனரின் விருப்பத்தின் அடிப்படையில், ஈக்கோ, கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் மற்றும் இன்டிவிஜுவல் ஆகிய 5 நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த காரில் இருக்கும் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் எஞ்சின் நடைமுறையில் ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது இந்த மைலேஜ் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் ஏஎம்ஜி ரைடு கன்ட்ரோல் நுட்பத்துடன் கூடிய சஸ்பெஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சஸ்பென்ஷன் ஏர் பாடி கன்ட்ரோல் மற்றும் மூன்று நிலைகளில் மாற்றிக் கொள்ளும் அடாப்டிவ் டேம்பிங் என்ற கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 360மிமீ விட்டமுடைய டிஸ்க்குகள் பொருத்தப்பட்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 320மிமீ விட்டமுடைய டிஸ்க் பொருத்தப்பட்ட பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5 ஸ்போக்குகளுடன் கூடிய 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விருப்பத்தின் பேரில் 21 இன்ச் அலாய் வீல்களையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வழக்கமான ஜிஎல்சி காரில் இருந்து வேறுபடுத்துவதற்காக பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த ஏஎம்ஜி வகை மாடல் பெற்றிருக்கிறது. க்ரோம் பட்டை மற்றும் கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, பெரிய அளவிலான ஏர் இன்டேக்குகள், வலிமையான முன்புற பம்பர் காரின் கம்பீரத்திற்கு வலு சேர்க்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் அசத்தலான அலாய் வீல்கள், தாழ்வான கூரை அமைப்பு காருக்கு வசீகரம் கொடுக்கிறது. பின்புறத்தில் கவர்ச்சிகரமான டெயில் லைட்டுகள், க்வாட் புகைப்போக்கி குழல் வடிவமைப்பு போன்றவை சிறப்பு சேர்க்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரின் இன்டீரியரும் அசத்தலாக இருக்கிறது. இந்த காரில் சிவப்பு நிற நூல் தையலுடன் கூடிய கருப்பு நிற லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் உள்ளன. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் ரூ.74.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. செயல்திறனும், தனித்துவம் கொண்ட கார்களை விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று கூறலாம்.

English summary
Mercedes-Benz has launched the GLC 43 AMG Coupe in India at a price of 74.80 lakh. The GLC 43 AMG Coupe is the latest addition to its expanding AMG lineup in India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark