வேற வழி... மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

மினி நிறுவனத்தின் மின்சார கார் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

அடுத்த சில ஆண்டுகளில் மின்சார கார் இல்லாமல் வர்த்தகத்தை ஓட்ட முடியாது என கார் நிறுவனங்கள் உணர்ந்து கொண்டுவிட்டன. இதனால், பெரும் முதலீடுகளை கொட்டி சிறந்த மின்சார கார்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பிரிமியம் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற மினி கார் நிறுவனமும் இப்போது மின்சார கார் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை மினி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் படங்கள் மற்றும் சில தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

வழக்கம்போல் மினி கார்களுக்குரிய டிசைன் தாத்பரியங்களை இந்த மின்சார கார் கான்செப்ட்டிலும் காண முடிகிறது. நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் தனது புதிய மின்சார காரை மினி கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

மினி கூப்பர் காரின் டிசைன் தாக்கம் அதிகம் தெரிவதுடன், அடுத்த தலைமுறை மினி கூப்பர் கார் மாடலாக கூறும் அளவுக்கு பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தனித்துவமான க்ரில் அமைப்பு, எலக்ட்ரிக் கார் என்பதை காட்டுவதற்கான இ என்ற எழுத்துடன் பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெறுகிறது. பம்பர், ஏர் இன்டேட்டுகள் டிசைன் சிறப்பாக இருக்கிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

கதவுடன் ஒட்டியபடி கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய டோர் ஹேண்டில்கள், ஃபைபர் க்ளாஸ் சைடு ஸ்கர்ட்டுகள் இந்த காரின் முக்கிய சிறப்புகளாக இருக்கின்றன. இந்த காரில் 19 அங்குல சக்கரங்களும், 3டி பிரிண்டர் மூலமாக உருவாக்கப்பட்ட சிறப்பான ஏரோடைனமிக் பேனல்களும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

பின்புறத்தில் மினி கார்களின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் லோகோ, பம்பர் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. கூரையில் ஸ்பாய்லர் மற்றும் பைபர் க்ளாஸ் டிஃபியூசர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

புதிய மினி மின்சார காரில் இடம்பெர இருக்கும் மின் மோட்டார் குறித்த தகவல் இல்லை. ஆனால், பெட்ரோல் மாடல்களை போன்று மிக சக்திவாய்ந்த மின் மோட்டார் இந்த காரில் பயன்படுத்தப்படும்.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் மினி நிறுவனத்தின் மின்சார கார் மாடலானது, கிட்டத்தட்ட தயாரிப்பு நிலையை நெருங்கிவிட்ட மாடலாகவே தெரிகிறது. வரும் 2019ம் ஆண்டில் இந்த புதிய மின்சார காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகமாகும் என்பது ஆட்டோமொபைல் மீடியாவினரின் கணிப்பு.

மினி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை வெளியிட்டது!

மின்சார கார் மாடலை 10 ஆண்டுகளுக்கு முன்னரே மினி இ மின்சார காரை அறிமுகப்படுத்திய நிலையில்,தற்போது மின்சார கார் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய கான்செப்ட் மாடலை மினி நிறுவனம் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
MINI has unveiled the new Electric Concept car, set to make its debut at the 2017 Frankfurt Motor Show in September. The electric car will hit the markets in 2019.
Story first published: Wednesday, August 30, 2017, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X