பிஎம்டபிள்யூவின் ‘மினி’ கார்களுக்கு சென்னையில் பிரத்யேக ஷோரூம் திறப்பு!

Written By:

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல பிஎம்டபிள்யூ நிறுவனம், மினி மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டுகளிலும் கார்களை தயாரித்து வருகிறது. கூப்பர், கண்ட்ரிமென் போன்ற மினி மாடல் கார்களுக்கு சமீபகாலமாக பலத்த வரவேற்பு கிடைத்து வருவதால் தற்போது பிரத்யேக மினி ஷோரூம்களை அமைத்து வருகிறது பிஎம்டபிள்யூ. தற்போது சென்னையில் முதல்முறையாக மினி ஷோரூமை துவங்கியுள்ளது மினி இந்தியா நிறுவனம்.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

சென்னைக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கும் கடந்த 10 ஆண்டுகாலமாகவே பந்தம் இருந்து வருகிறது. ஏனெனில் இந்தியாவிலேயே சென்னையில் மட்டும் தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தது. தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலை.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

கவர்ந்திழுக்கும் ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் பவர் காரணமாக மினி பிராண்டு கார்களுக்கு இந்தியர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பிஎம்டபிள்யூ மினி கார் உற்பத்தியை, சென்னை தொழிற்சாலையில் கடந்த 2013ல் தொடங்கியது. ஐரோப்பாவை விட்டு வெளிநாடு ஒன்றில் மினி கார்கள் உற்பத்தி செய்யப்படுவது சென்னையில்மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

புதிய மினி ஷோரூம் சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனெவே பிஎம்டபிள்யூ ஷோரூமை சென்னையில் நடத்தி வரும் பிஎம்டபிள்யூவின் டீலரான ‘கேயூஎன் எக்ஸ்கிள்யூசிவ்' தான் இந்த புதிய ஷோரூமையும் அமைத்துள்ளனர்.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

இந்த புதிய மினி ஷோரூமில் விற்பனை மட்டுமல்லாது, விற்பனைக்கு பிந்தைய சேவை (சர்வீஸ்), ஆச்ஸஸ்சரிகள் மற்றும் மினி ஃபைனான்ஸ் மூலம் கார் வாங்க லோன் மற்றும் இன்ஸூரன்ஸ் ஆகிய சேவைகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

சென்னை விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ ஷோரூம் அருகிலேயே இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அனைத்து மினி கார்களும் இந்த ஷோரூமில் கிடைக்கும் என அறிவிக்கப்படுள்ளது.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

தற்போது இந்தியாவில் 3 கதவுகள் கொண்ட மினி கூப்பர், 5 கதவுகள் கொண்ட மினி கூப்பர், மினி கன்வெர்டிபிள், மினி கண்ட்ரிமென், மினி கிளப்மென் ஆகிய 5 மாடல்கள் விற்பனையில் உள்ளது. சாலையில் செல்லும் மினி கார்களை நிச்சயம் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், இதன் டிசைன் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மினியின் பிரத்யேக ஷோரூம் இந்தியாவின் 5 வது மினி டீலர்ஷிப் ஆகும். இதற்கு முன்னர் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் மினி தனது ஷோரூமை அமைத்துள்ளது.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

சென்னை ஷோரூம் திறப்பு விழாவில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா பேசும்போது, "சென்னையில் பிஎம்டபிள்யூவின் நீண்ட நாளைய பங்குதாரராக செயல்பட்டு வரும் ‘கேயூஎன் எக்ஸ்கிள்யூசிவ்' இணைந்து மினி ஷோரூம் அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

"தனித்தன்மை வாய்ந்த டிசைனுடன் இந்தியாவில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை அமைத்துக்கொண்ட மினி பிராண்டு, தொழில்நுட்பம், மற்றும் பிரிமியம் அம்சங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் மேலும் முக்கிய இடத்தை மினி கைப்பற்றும் என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் மேலும் கூறினார்.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

புதிதாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மினி ஷோரூமின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

எண். 20,

ஜிஎஸ்டி சாலை,

மீனம்பாக்கம்,

சென்னை,

தமிழ்நாடு.

பிஎம்டள்யூவின் ‘மினி’ கார் ஷோரூம் சென்னையில் திறப்பு!

மினி ஷோரூம் திறப்பைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கான பிரத்யேக ‘பிஎம்டபிள்யூ மோடோரேட்' ஷோரும் விரைவில் சென்னையில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about mini showroom opened in chennai by bmw. pictures, location, showroom address and find more details.
Story first published: Friday, April 7, 2017, 12:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark