காஸ்ட்லி ரேங்லரை போன்று உருமாற்றம் செய்யப்படும் மஹிந்திரா 'தார்' ஜீப்!

Written By:

கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் விலை கொண்டது சொகுசு எஸ்யூவி மாடலான ரேங்லர் ஜீப், ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்க இயலாது என்பவர்களுக்காக மஹிந்திரா தார் ஜீப்பை ரேங்லரைப் போன்றே மாடிஃபை செய்து தருகிறது கேரளாவை சேர்ந்த கார் மாடிஃபிகேஷன் நிறுவனம்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

ஆஃப் ரோடிங் மீது மோகம் கொண்டவர்களுக்கு கனவு வாகனமாக விளங்குவது ரேங்லர் ஜீப் ஆகும். இதன் விலை மிக அதிகம் என்பதால் பலருக்கு அதனை சொந்தமாக்கிக்கொள்வது என்பது வெறும் கனவாகவே உள்ளது.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

அக்கனவை நனவாக்கித் தருகிறார்கள் ரெட் பாஃக்ஸ் ஆட்டோ கேர் என்ற கார் மாடிஃபிகேசன் நிறுவனத்தார், அதுவும் வாங்கக்கூடிய விலையில். இவர்கள் உருமாற்றித் தரும் தார் ஜீப் தான் ரேங்லரை சொந்தமாக்க வேண்டும் என்பவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

ரியர்வியூ கண்ணாடிகள், கதவுகளின் கைப்பிடிகள், ஃபூயல் டேங்கின் மூடி, பின்பக்க விளக்குகள் என ரேங்லர் ஜீப்பின் சில உதிரி பாகங்களைக் கொண்டு தார் ஜீப்பில் மாற்றம் செய்கின்றனர் இவர்கள். முகப்பில் ரேங்லர் ஜீப் லோகோவைக் கூட இவர்கள் பொருத்தி தருகின்றனர்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

ரேங்லரின் வீல்கள் அளவில் பெரிது, ஆதலால் தாரில் உள்ள வீல்களை நீக்கிவிட்டு, அளவில் பெரிய டயர்களை இதில் பொருத்தியுள்ளனர், இதன் ரியர்வியூ கண்ணாடி எல்ஈடியுடன் கூடியது. முகப்பில் உள்ள விண்ட் ஸ்கிரீனைக் கூட ரேங்லரில் உள்ளதைப் போன்றே உருமாற்றுயுள்ளனர்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

ரேங்லரின் உச்சியைப் போன்றே தார் ஜீப்பின் உச்சியும் உள்ளது, ரியர் பம்பர்கள், மற்ற சிறு சிறு விளக்குகளும் ரேங்லரில் உள்ளதைப் போன்றே உள்ளது.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

இண்டீரியரைப் பொருத்தமட்டில் ரேங்லரில் உள்ள முன்பக்க சீட்கள் போன்றே மார்க்கெட்டில் கிடைக்கும் விலை உயர்ந்த சீட்கள் கொண்டு மாற்றியுள்ளனர். மியூசிக் சிஸ்டத்தையும் கூட மாற்றிவிட்டனர்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

பெரும்பாலான மாற்றங்களைக் கண்ட பின்னர், இது தார் ஜீப் என்று சொன்னால் யாரும் நம்புவது கடினமே! அத்தனை வேலையையும் ரூ.5 லட்சத்தில் முடித்துத் தருகின்றனர்.

ரேங்லர் போன்று மாடிஃபை செய்யப்படும் மஹிந்திரா ‘தார்' ஜீப்!

தார் ‘டே பிரேக் எடிசன்' என்ற பெயரில் இதைப் போன்றே மாறுதல்களை மஹிந்திரா நிறுவனமே செய்து தருகிறது. ஆயினும் ரெட் பாஃக்ஸ் ஆட்டோ கேர் நிறுவனம் மாடிஃபை செய்து தரும் விலையை விட அதற்கு கூடுதல் விலை என்பதால், அதனை ஒப்பிடுகையில், இந்த விலை சற்றே குறைவு தான். ரேங்லரைப் போன்ற தோற்றம் தரும் தார் ஜீப்பினை மாடிஃபை செய்ய இவர்களுக்கு 9 மாதம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் எஞ்சின் கொண்ட மஹிந்திராவின் முதல் எஸ்யுவியான கேயுவி100 மாடல் காரின் படங்கள் :

English summary
This Mahindra Thar has undergone extensive modifications to look like a Jeep Wrangler, which costs almost seven times more than the Thar.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark