ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

Written By:

அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜீப் எஸ்யூவி பிராண்டு தயாரிப்புகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. கடந்த ஆண்டு இந்தியாவிலும் ஜீப் எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் விலைதான் பலருக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது.

Source: Sunmac

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

இந்த நிலையில், மஹிந்திரா டியூவி 300 உரிமையாளர் ஒருவர் தனது காரை ஜீப் செரோக்கீ எஸ்யூவி போல மாற்றங்களை செய்து பெற்றுள்ளார். மஹிந்திரா என்று எளிதில் கண்டிபிடிக்க முடியாத அளவுக்கு முகப்பை மிக நேர்த்தியாக ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் சாயலை கொண்டு வந்துள்ளனர்.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

கோவையை சேர்ந்த சன்மேக் கார் மாடிஃபிகேஷன் நிறுவனம்தான் இந்த எஸ்யூவியில் மாற்றங்களை செய்து கொடுத்து அந்த ஜீப் பிரியரை சந்தோஷப்படுத்தி உள்ளது. ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் முத்தாய்ப்பான முன்புற க்ரில் அமைப்பு, பானட்டில் ஜீப் பிராண்டு பேட்ஜ், ஹெட்லைட், ஏர் இன்டேக் என அனைத்தும் மிக நேர்த்தியாக ஜீப் செரோக்கீ போலவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

ஆடி க்யூ3 எஸ்யூவியின் ஹெட்லைட் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் பனி விளக்குகளின் டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை. அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

பக்கவாட்டிலும், பின்புறத்திலும் அதிக மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், ஜீப் பேட்ஜ் பின்புற டெயில் கேட்டில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், உட்புறத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்த தகவலும் இல்லை.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

இதுபோன்று முகப்பை மட்டும் மாற்றுவதற்கு ரூ.1.5 லட்சம் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செலவு ஜீப் ரசிகராக இருக்கும் மஹிந்திரா டியூவி300 உரிமையாளருக்கு பெரிதாக இருக்காது. ஏனெனில், கோடி விலையில் விற்கப்படும் ஜீப் செரோக்கீ எஸ்யூவியை வாங்குவதற்கு பதிலாக, தனது மஹிந்திரா வாகனத்தையே ஜீப் எஸ்யூவி போல சில லட்சம் செலவிலேயே காரியத்தை முடித்துவிட்டார்.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

போர் பீரங்கியை மனதில் வைத்து மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை வடிவமைத்தாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்தது. அதேபோன்று, அதன் தோற்றமும் மிக முரட்டுத்தனமாக இருக்கிறது. 84 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 98.6 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

 ஜீப் எஸ்யூவி அவதாரம் எடுத்த மஹிந்திரா டியூவி 300!!

இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் வகையிலும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. 4 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியில் 7 பேர் பயணிக்கும் வசதியை அளிப்பதும் இதன் முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

புதிய ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் படங்கள்!

சரி, ஜீப் செரோக்கீ எஸ்யூவி எப்படி இருக்கும்னு பார்த்துடலாமா? கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்யுங்கள்.

English summary
Mahindra TUV 300 has been modified extensively to look like a Jeep Grand Cherokee in Kerala. Although the technical specifications remains the same as stock model.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark