மும்பையில் வேகம் எடுக்கும் மின்சார வாகன பயன்பாடு: 6 மின்சார பேருந்துகள் அறிமுகம்..!!
மும்பையில் வேகம் எடுக்கும் மின்சார வாகன பயன்பாடு: 6 மின்சார பேருந்துகள் அறிமுகம்..!!
மும்பை பொது போக்குவரத்து திட்டத்தில் புதியதாக 6 மின்சார திறன் கொண்டு இயங்கும் பேருந்துகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தின் கோல்டுஸ்டோன் குரூப் மற்றும் சீனாவின் பி.ஒய்.டி வாகன தயாரிப்பு நிறுவனம் இணைந்து 6 இ-பஸ் கே7 மின்சார ரக பேருந்துகளை மும்பை நகரத்திற்கு வழங்கியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாக்பூருக்கு பிறகு மின்சார வாகன போக்குவரத்தை இரண்டாவதாக பெறும் நகரமாக மும்பை உள்ளது.

ரூ.1.61 கோடி மதிப்பை பெறும் ஒரு இ-பஸ் கே7 மின்சார பேருந்து, எரிவாயு கொண்டு இயங்கும் பேருந்தை விட இரண்டு மடங்கு விலை அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200கி.மீ வரை இந்த மின்சார பேருந்துகளால் செல்ல முடியும் என அதை தயாரித்த கோல்டுஸ்டோன் நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் அராயின் சான்றிதழும் இ-பஸ் கே7 பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாலைகளில் அதிகப்பட்சமாக 70 கி.மீ வேகத்தில் இந்த பேருந்துகளை இயக்க முடியும்.
Recommended Video


31 பேர் வரை பயணிக்கக்கூடிய வசதி படைத்த இந்த மின்சார பேருந்துகளில் பயணிக்க பிரத்யேக கட்டணம் இல்லை என்றும்,
Trending On Drivespark:

தற்போது பயன்பாடில் இருக்கும் பேருந்துகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களே இதற்கும் பெறப்படும் என மஹாராஷ்ரா அரசு தெரிவித்துள்ளது.

மும்பை நகரை பொறுத்தவரை பெட்ரோலில் இயங்கும் பேருந்துகள் ரூ.15 என்ற மதிப்பில் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்கின்றன.

இதுவே டீசல் என்று வந்தால் ரூ.20 என பேருந்திற்கான எரிவாயு செலவீனங்கள் உள்ளன. ஆனால் மின்சார தேவைகளில் பேருந்திற்கான செலவீனங்கள் மிகவும் குறைவு.

சுமார் 3 முதல் 4 மணி நேரங்கள் வரை பேருந்தின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜாக நேரம் தேவைப்படுகிறது. ஒரு கி.மீ வரை அதற்காக ஆகும் செலவீங்கள் வெறும் ரூ.8 மட்டுமே.

கோல்டுஸ்டோன் நிறுவனம் தயாரித்த மின்சார பேருந்துகள் முதன்முதலாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இயக்கப்பட்டன.
அங்கு மணலி முதல் ரோங்டாங் பகுதி வரை கோல்டுஸ்டோன் மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

அதற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தியாவில் கோல்டுஸ்டோன் மின்சார பேருந்துகள் மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் இயக்கப்படுகின்றன.

மஹாராஷ்டிரா அரசு ஏற்கனவே நவி மும்பை பகுதியில் வால்வோ ஹைஃபிரிட் பேருந்துகளை மக்களின் போக்குவரத்து தேவைக்காக இயக்கி வருகிறது.

மொத்தமாக ரூ.10 கோடி செலவில் மஹாராஷ்டிர அரசால் வாங்கப்பட்டுள்ள கோல்டுஸ்டோன் மின்சார பேருந்துகள், மும்பையை தாண்டி புறநகர் பகுதிகளிலும் இயக்கப்படவுள்ளன.

தற்போதிருக்கும் இந்த 6 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து, இதற்கான போக்குவரத்து மேலான்மை மேலும் விரிவுப்படுத்தப்படும் என மஹாராஷ்டிர அரசு செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








