புதிய பவர்ஃபுல் ஆடி ஏ4 டீசல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

Written By: Staff

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது புதிய தலைமுறை ஆடி ஏ4 35 டிடிஐ டீசல் வேடியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் விவரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஆடி ஏ4 விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 190 பிஹச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாகும். மேலும், 18.25 கிமீ/லி மைலேஜ் என்று இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி அமைப்பினால் (அராய்) சான்றளிக்கப்பட்டுள்ளதாகும். இது முந்தைய ஏ4 மாடலைக்காட்டிலும் 7% கூடுதலாகும்.

புதிய ஆடி ஏ4 விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ4, தொழில்நுட்பம் மற்றும் அழகு என்ற கலவையில் உருவாகியுள்ளது. முந்தைய தலைமுறை ஏ4 மாடலின் டிசைனை இதில் மெருகூட்டியிருக்கின்றனர்.

புதிய ஆடி ஏ4 விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் முன்பிருந்த கன்வென்ஷனல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கு மாற்றாக, இரண்டு டிஸ்பிளே மோட் கொண்ட 12.3 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஆடியின் பிரத்யேக எம்எம்ஐ நேவிகேசன், வயர்லஸ் சார்ஜிங் போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளது.

புதிய ஆடி ஏ4 விற்பனைக்கு அறிமுகம்!

இதன் விலை அடிப்படையிலான கார் நிறுவனங்கள், பெட்ரோல் மாடல்களை நோக்கி நகர்ந்து வரும் போது, போட்டியாளர்கள் விட்டுச்சென்ற இடத்தை ஆடி இந்த டீசல் மாடல் மூலம் பூர்த்தி செய்கிறது. மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 4 சீரீஸ் மற்றும் வால்வோ எஸ்60 ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியாக புதிய ஆடி ஏ4 இருக்கும் என கருதப்படுகிறது.

புதிய ஆடி ஏ4 விற்பனைக்கு அறிமுகம்!

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 40.20 லட்சம் (டெல்லி), முன்னதாக இதன் பெட்ரோல் வேரியண்ட் கடந்த செப்டம்பர் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

புதிய ஆடி ஏ4 காரின் படங்கள்:

English summary
New Audi A4 35 TDI diesel variant launched in India. Audi has claimed the new A4 delivers 7 percent better mileage compared to the older car.
Story first published: Wednesday, February 15, 2017, 13:31 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos