சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

Written By:

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த புதிய எம்-5 செடான் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. சூப்பர் செடான் கார்களின் அரசனாக வர்ணிக்கப்படும் இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எம்-5 சூப்பர் செடான் கார் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Need For Speed வீடியோ விளையாட்டின் புதிய பதிப்பில் இந்த புதிய பிஎம்டபிள்யூ எம்-5 செடான் கார் இடம்பெறுகிறது. இதற்கான பத்திரிக்கையாளர் கூட்டத்தில்தான் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், விபரங்களும் வெளியிடப்பட்டது.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் 4,965மிமீ நீளமும், 1,903மிமீ அகலமும், 1,473 மிமீ உஉயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,982மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. பழைய எம்-5 காரைவிட 55மிமீ நீளத்திலும், 12மிமீ அகலத்திலும், 17 மிமீ உயரத்திலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. வீல் பேஸ் 18மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

இந்த காரில் ஏராளமான இலகு வகை உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. செராமிக் பிரேக்குகள், அலுமினிய பானட், கார்பன் ஃபைபர் கூரை, இலகு வகை புகைப்போக்கி அமைப்பு, லித்தியம் அயான் பேட்டரி ஆகியவற்றின் மூலமாக கார் எடை வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் பழைய மாடலைவிட 100 கிலோ வரை எடை குறைநந்துள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

இந்த புதிய பிஎம்டபிள்யூ எம்-5 சூப்பர் செடான் காரில் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட இந்த கார் 40 பிஎச்பி கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிராண்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் எஸ்யூவி அல்லாத ரகத்திலான முதல் காரும் இந்த எம்-5 கார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பின்புற சக்கரங்களுக்கு தேவைப்படும்போது மட்டுமே எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படும் நுட்பத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் ஏற்கனவே இருந்த 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக, புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 306 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 காரில் இருக்கும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூன்று விதமான நிலைகளில் இயங்கும். 4 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஸ்போர்ட் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய நிலைகளில் இயங்கும். இந்த காரின் எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவவை பல நிலைகளில் இயங்கும் நுட்பத்தை பெற்றிருக்கின்றன.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 காரின் மிரட்டலான வடிவமைப்பு கார் பிரியர்களையும், ரேஸ் உலகினரையும் கவர்வதாக அமைந்துள்ளது. இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 394மிமீ ஸ்டீல் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் 381மிமீ டிஸ்க் பிரேக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 20 அங்குல அலாய் வீல்களை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய முடியும். அதற்கு கார்பன் செராமிக் பிரேக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

சூப்பர் செடான் கார்களின் அரசன் புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 கார் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.89 லட்சம் மதிப்பில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ 63 எஸ் மாடலுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

English summary
German luxury carmaker BMW has revealed the all-new M5 at Gamescom 2017 in Cologne, Germany ahead of its global debut at the 2017 Frankfurt Motor Show next month.
Story first published: Wednesday, August 23, 2017, 16:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more