விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார் பற்றிய முழு தகவல்கள்..!

Written By:

மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை பீட் ஹேட்ச்பேக் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது செவர்லெட் நிறுவனம்.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டு உலகளவில் பிரபலமானதாக விளங்கி வருகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க், பீட், செயில், எஞ்சாய், க்ரூஸ், டிரையல்பிளேசர் ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இதில் ஹேட்ச்பேக் மாடலான பீட், சிறந்த ஸ்டைலிங் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் காரணமாக பலதரப்பினராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு மாடலாக உருவெடுத்துள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

மேலும் பீட் ஹேட்ச்பேக் காரே செவர்லே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இந்நிலையில் செவர்லே நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 பீட் காரை விரைவில் இந்தியாவில் ‘இண்டெலி பீட்' என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

உலக சந்தைகளில் இந்த புதிய காரை ஸ்பார்க் என்ற பெயரில் இந்நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

ஏற்கெனவே சிறந்த டிசைனைக் கொண்டதாக இருந்த பீட் கார், தற்போது மேலும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

முந்தைய பீட் காரை காட்டிலும் சிறந்த தோற்றம் கொண்டதாக 2017 பீட் இருக்கும். இதன் பின்புற விளக்குகளின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு எல்ஈடி விளக்காக மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

முந்தைய மாடலில் இருந்ததை போன்றே பின்புற டோர் ஹேண்டில்கள் பில்லரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இதே போல இதன் பின்புற நம்பர் பிளேட் பூட் லிட்-ல் இருந்து பம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

புதிய 2017 இண்டெலி பீட் காரில் செவர்லேயின் பிரத்யேக மை லிங்க் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இது வாய்ஸ் ரெகக்னைஷன், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

மற்றபடி இதில் ஏற்கெனவே இருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டீசல் இஞ்சின் ஆகியவை மாற்றப்படாது என்றே தெரிகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

என்றாலும் இதன் இஞ்சின் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎஸ் ஆற்றலையும், 106.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இதே போல இதன் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 57 பிஎஸ் ஆற்றலையும், 142.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 17.8 கிமீ மற்றும் டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 25.44 கிமீ மைலேஜ் தருகிறது. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

புதிய 2017 செவர்லே பீட் ஹேட்ச்பேக் கார் வரும் மே மாதம் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

இந்தியாவில் செவர்லே பீட் கார் அறிமுகப்படுத்தப்படும் போது, அது ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, டாடா டியாகோ மற்றும் மாருதிசுசுகி இக்னிஸ் ஆகிய மாடலக்ளுக்கு கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

மேம்படுத்தப்பட்ட 2017 இண்டெலி பீட் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகு

பீட் ஆக்டிவ் என்ற கிராஸ் ஹேட்ச்பேக் காரையும்,

விரைவில் அறிமுகமாகவுள்ள 2017 செவர்லே பீட் கார்..!

பீட் எசென்சியா என்ற காம்பாக்ட் செடன் காரையும் அடுத்ததாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது செவர்லே நிறுவனம்.

English summary
Read in Tamil about chevrolet's new 2017 beat hatchback car launch details in india revealed.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark