2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா 5 வேரியண்ட்டுகளில் வந்துள்ளன. ஆம்பியன்ட், ட்ரென்ட், ட்ரென்ட் ப்ளஸ், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலின் ஆட்டோமேட்டிக் மாடல் ட்ரென்ட் ப்ளஸ் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டிசைன்

டிசைன்

முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக இல்லாவிட்டாலும், இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த புதிய மாடலில் 1,600 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக ஃபோர்டு தெரிவிக்கிறது. 85 சதவீதம் உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

முக்கிய மாற்றமாக தென்படுவது முன்புறத்தில் உள்ள க்ரில் அமைப்பு. ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இருப்பது போன்ற அமைப்புடைய, மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு இப்போது புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை அலங்கரிக்கிறது. படுக்கை வாட்டில் க்ரோம் பட்டைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Nexon Review: Specs
2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. பனி விளக்கு அறையில், இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், முக்கோண வடிவில் காட்சி தருகிறது. புதிய ஸ்கிட் பிளேட் பம்பரில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் சென்டர் கன்சோல் அமைப்பும் முற்றிலும் மாறி இருக்கிறது. டேஷ்போர்டு அமைப்பின் நடுவில் 8 அங்குல தொடுதிரை பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு சிங்க்-3 தொடர்பு வசதியும் முக்கியமானது. இந்த காரில் 7 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. குடுவை போன்ற அமைப்பு இல்லாத, தட்டையான புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபிகோ காரில் இருப்பது போன்ற ஏசி கன்ட்ரோல் அமைப்பு உள்ளது.

 பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுக்கு பதிலாக, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

டிராகன் என்ற புதிய குடும்ப வரிசையில் குறிப்பிடப்படும், மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

 டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

டீசல் மாடலில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் எஞ்சின்தான் புதிய மாடலிலும் வந்திருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் எஞ்சின் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் வரையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் வரை தரும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகளில், இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டை தேர்வு செய்தால், 2 ஏர்பேக்குகள், இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்து பல கூடுதல் நுட்பங்கள் உள்ளன.

முக்கிய பாதுகாப்பு வசதிகள்

முக்கிய பாதுகாப்பு வசதிகள்

விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், கார் வழுக்கிச் செல்வதை தவிர்த்து அதிக தரைப்பிடிப்பை தரும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையை வழங்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், சரிவான சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வேக கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் போன்ற ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரூ.7.31 லட்சம் முதல் ரூ.10.67 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

2017 போர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க க்ளிக் செய்க.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
2017 Ford EcoSport Launched In India.
Story first published: Thursday, November 9, 2017, 14:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark