ஜீப் காம்பாஸ் எஸ்யூவியின் ஆரம்ப விலை குறித்த தகவலால் ஒரே பரபரப்பு!

Written By:

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் கடந்த ஆண்டு செரோக்கீ மற்றும் ரேங்லர் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அவை இரண்டுமே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், எகிடுதகிடான விலை கொண்ட மாடல்களாக இருக்கின்றன. ரூ.70 லட்சத்தை தாண்டிய விலையில் இந்த இரு மாடல்களும் கிடைக்கின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை வாங்க நினைத்தாலும், அதன் விலை அவர்களை அரட்டுகிறது.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புத்தம் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஜீப் நிறுவனம். தற்போது தீவிர சாலை சோதனை ஓட்டங்களில் இருக்கும் இந்த எஸ்யூவி அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

இதனிடையே, இந்த எஸ்யூவியின் விலை குறித்த புதிய தகவல் ஒன்று கார் மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆம், ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் ஜீப் காம்பாஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எஸ்யூவியை அறிமுக விலையாக ரூ.16 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

இந்த தகவல் ஜீப் பிரியர்களை மட்டுமின்றி, டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற கார் மாடல்களை வாங்க இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரு கார்களுக்கும் புதிய ஜீப் காம்பாஸ் நேரடி போட்டியாக இல்லாவிட்டாலும், விலையின் மூலமாக நெருக்கடியை தரும் என கருதப்படுகிறது. உண்மையிலேயே இந்த அறிமுக விலையில் ஜீப் காம்பாஸ் வரும்பட்சத்தில், அது மிகப்பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

ஏனெனில், ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிமியம் அந்தஸ்து உடையவை. மேலும், ஜீப் காம்பாஸ் எஸ்யூவியின் டிசைனும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. முரட்டுத்தனமான தோற்றம், சிறந்த தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை நிச்சயம் தேர்வு செய்ய தூண்டும்.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

வெளிநாடுகளில் இதன் டாப் வேரியண்ட் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 19 இன்ச் அலாய் வீல்கள், இரட்டை குழல் புகைப்போக்கி குழாய்கள், இரண்டு பிரிவான சன்ரூஃப், 7.0 இன்ச் எல்இடி வண்ண திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் 8.4 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், சப் ஊஃபர், ஆம்பிளிபயர் கொண்ட 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய பீட்ஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

அதுமட்டுமில்லை, 4.4 மீட்டர் நீளம் கொண்ட ஜீப் காம்பாஸ் எஸ்யூவி இடவசதியிலும் மிகச் சிறப்பாக இருக்கும். 5 சீட்டர் மாடலாக வரும் ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கும் நேரடியாக கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் இருக்கையை 40:20:40 என்ற விகிதத்தில் மூன்று பாகங்களாக மடக்கும் வசதியையும் பெற்றிருக்கும்.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

வெளிநாடுகளில் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களிலும், 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், எத்தனாலில் இயங்கும் 2.0 லிட்டர் டைகர்ஷார்க் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில், 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 165 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் கிடைக்கும்.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

மஹாராஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் ஆலையில்தான் இந்த புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்பட உள்ளதால், மிக சவாலான விலையில் வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

இந்த எஸ்யூவி மாடல் ஸ்போர்ட், லான்ஜிடியூட், லிமிடேட் மற்றும் ட்ரெயில்ஹாக் ஆகிய நான்கு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், ட்ரெயில்ஹாக் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்பட ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். கருப்பு- ஆரஞ்ச் வண்ணத்தில் இருக்கும் மாடல்தான் ஜீப் காம்பாஸ் ட்ரெயில்ஹாக் மாடல்.

ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி... ஒரே பரபரப்பு!!

மொத்தத்தில் இந்த ஆண்டு வரும் புதிய கார் மாடல்களில் வாடிக்கையாளர்களின் ஆவலை வெகுவாக ஈர்த்துள்ள மாடல்களில் ஜீப் காம்பாஸ் எஸ்யூவியும் ஒன்றாக மாறி உள்ளது. ரூ.16 லட்சம் ஆரம்ப விலை என்பது அறிமுகச் சலுகையாகவே கூறப்படுகிறது. எனவே, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களில் விலை உயர்வு இருக்கும். எனவே, முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: New Jeep Compass to be priced at INR 16 lakhs in India.
Story first published: Wednesday, March 1, 2017, 9:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark