புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்!

Written By:

யாரும் எதிர்பாராத விலையில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி வகை கார் வசதிகளை பொறுத்து மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் மூன்று வேரியண்ட்டுகளிலுிம், டீசல் மாடல் 7 விதமான வேரியண்ட்டுகளிலும் வந்துள்ளது.

ஸ்போர்ட் வேரியண்ட்

ஸ்போர்ட் வேரியண்ட்

பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே, இந்த குறைவான விலை வேரியண்ட்டான ஸ்போர்ட் வேரியண்ட் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 5.0 இன்ச் திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், ஹாலஜன் ஹெட்லைட், டியூவல் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், கருப்பு வண்ண இன்டீரியர், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

லான்ஜிடியூட் வேரியண்ட்

லான்ஜிடியூட் வேரியண்ட்

டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கும். ஸ்போர்ட் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக முன்புற, பின்புற பனி விளக்குகள், 17 இன்ச் அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் டியூவல் டோன் இண்டீரியர் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

லான்ஜிடியூட் ஆப்ஷன்

லான்ஜிடியூட் ஆப்ஷன்

இந்த வேரியண்ட்டில் 7.0 இன்ச் திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் வசதி, ரூஃப் ரெயில்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன.

 லிமிடேட் வேரியண்ட்

லிமிடேட் வேரியண்ட்

பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் கேமரா, சாம்பல் வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, சில் கார்டுகள், செலக்டெர்ரெயின் 4 வீல் டிரைவ் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள்[4 வீல் டிரைவ் மாடலில் மட்டும்] ஆகியவையும் உண்டு.

லிமிடேட் ஆப்ஷன்

லிமிடேட் ஆப்ஷன்

இதுதான் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த மாடல். பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும். HID ஹெட்லைட்டுகள் மற்றும் கருப்பு வண்ண கூரை கூடுதல் சிறப்பம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

பெட்ரோல் வேரியண்ட்டுகளின் விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகளின் விலை விபரம்

புதிய ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் மாடலின் விலை விபரங்களை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்

பெட்ரோல் மாடல் எக்ஸ்ஷோரூம் விலை
ஸ்போர்ட் ரூ.14.95 லட்சம்
லிமிடேட் ரூ.18.70 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் ரூ.19.40 லட்சம்
புதிய ஜீப் காம்பஸ் விலை விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் விலை விபரங்களை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்

டீசல் மாடல் எக்ஸ்ஷோரூம் விலை
ஸ்போர்ட் ரூ. 15.45 லட்சம்
லான்ஜிடியூட் ரூ. 16.45 லட்சம்
லான்ஜிடியூட் ஆப்ஷன் ரூ. 17.25 லட்சம்
லிமிடேட் ரூ. 18.05 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் ரூ. 18.75 லட்சம்
லிமிடேட் 4x4 ரூ. 19.95 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் 4x4 ரூ.20.65 லட்சம்
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass variants explained.
Story first published: Monday, July 31, 2017, 17:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark