121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் அசால்ட்டாக கட்டி இழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி!

Written By:

எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனம் தனது எஸ்யூவிகளின் பலத்தை காட்டுவதற்கு அவ்வப்போது சில சாகச நிகழ்வுகளை நடத்தி காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு 100 டன் எடையுடைய ரயிலை 10 கிமீ தூரம் இழுத்துச் சென்று பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதே வகையில், இப்போது அதைவிட பிரம்மாண்டமான சாதனையை புரிந்துள்ளது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சுரங்கங்களில் ஒரே நேரத்தில் அதிக கனிமங்களை எடுத்துச் செல்வதற்காக பல ட்ரெயிலர்கள் பிணைக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்ப்பதற்கு ரயில் போல இருப்பதால், இவற்றை ரோடு ரயில் என்று அழைக்கின்றனர்.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

இதுபோன்று, 121 டன் எடையுடைய ரோடு ரயில் ஒன்றை லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி கட்டி இழுத்து அசத்தி இருக்கிறது. சில மீட்டர்கள் தூரம் என்று நினைக்க வேண்டாம்.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

கிட்டத்தட்ட 15.9 கிமீ தூரம் மணிக்கு 43 கிமீ வேகத்தில் இந்த ரோடு ரயிலை லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி இழுத்துச் சென்று அசத்தி இருக்கிறது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

பொதுவாக 4 ட்ரெயிலர்களை மட்டுமே ரோடு ரயிலை பிணைக்க வேண்டும் என்ற சட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால், இந்த சாதனை நிகழ்வுக்காக விசேஷ அனுமதியுடன், 7 ட்ரெயிலர்கள் பிணைக்கப்பட்ட ரோடு ரயில் பயன்படுத்தப்பட்டது. அந்த ட்ரெயிலரானது 328 நீளம் கொண்டது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

மிக பிரம்மாண்டமான அந்த ட்ரெயிலரை அனாயசமாக இழுத்துச் சென்றுள்ளது லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி. ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

2018ம் ஆண்டு மாடலாக வர இருக்கும் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியின் பராக்கிரமங்களை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் இந்த சாகச நிகழ்வு நடத்திக் காட்டப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி டீசல் மாடல்தான் இந்த சாதனைக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

இந்த எஸ்யூவியின் டீசல் மாடலில் 254 எச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே இந்த எஞ்சின் ஆப்ஷனுடன் டிஸ்கவரி கிடைக்கிறது.

 121 டன் ரோடு ரயிலை 15 கிமீ தூரம் கட்டியிழுத்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி!

அதிகபட்சமாகவே இந்த எஞ்சின் சாதாரணமாக 3.5 டன் இழுவை திறன் கொண்டது. ஆனால், 121 டன் எடையுடைய அந்த ரோடு ரயிலை கட்டி இழுத்திருப்பதும் குறிப்பிடப்பட்டது.

இந்த சாதனை நிகழ்வின் வீடியோவை இங்கே காணலாம்.

English summary
New Land Rover Discovery tows 121-ton Aussie road train.
Story first published: Thursday, September 21, 2017, 11:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark