இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக வாகை சூடப்போகும் புதிய மாருதி டிசையர்!

Written By:

வடிவமைப்பு, வசதிகளில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் மாருதி டிசையர் கார் வரும் 16ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாடல் என்பதால், புதிய மாடல் மீதும் அதிக ஆவலும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

இந்த காரின் ஸ்பை படங்கள், எஞ்சின் விபரங்கள் அண்மையில் வெளியாகின. ஆனால், வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த மைலேஜ் விபரம் இதுவரை வெளியாகவில்லை. இந்தநிலையில், தற்போது புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ் விபரம் கசிந்துள்ளது.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

பழைய டிசையர் டீசல் கார் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்த நிலையில், புதிய மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற இருக்கிறது. தற்போது மாருதி சியாஸ் காரின் டீசல் ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜ் தரும் என சான்று பெற்றிருக்கிறது.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

பழைய டிசையர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.85 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய டிசையர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளதாம். எனவே, பெட்ரோல் மாடலும் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

புதிய மாருதி டிசையர் காரின் டீசல் காரில் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை வழங்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரை அளிக்கும். பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

புதிய மாருதி டிசையர் காரின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டைமன்ட் கட் அலாய் வீல்கள் போன்றவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

காரின் அகலம் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. உயரம் 40 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. வீல் பேஸும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், உட்புறத்தில் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், பூட் ரூம் இடவசதி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது 376 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாறி இருக்கிறது.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

புதிய மாருதி டிசையர் காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மரத் தகடுகள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றன.

வாய் பிளக்க வைக்கும் புதிய மாருதி டிசையர் காரின் மைலேஜ்!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். புதிய மாருதி டிசையர் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் மாருதி டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
New Maruti Dzire Mileage figures leaked.
Story first published: Friday, May 5, 2017, 12:52 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos