மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் ரூ.5.24 லட்சத்தில் அறிமுகம்.. முழு தகவல்கள்..!

By Staff

மாருதிசுசுகி நிறுவனம் ஓசையில்லாமல் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் என்ற பிரத்யேக டேக்ஸி வேரியண்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

விரைவில் கைவிடப்பட இருக்கும் ஸ்விஃப்ட் டிசையர் மாடலின் அடுத்த தலைமுறையாக இந்த புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் இருக்கும் என தெரியவருகிறது.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

புதிய 2017 ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் டேக்ஸி சேவைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

இந்த புதிய காரில் முகப்பு கிரில், வெளிப்புற ரியர் வியூ கண்ணாடியின் மூடிகள், ஃபாக் லைட் கிளஸ்டர், டோர் ஹேண்டில்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளன.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

ஸ்டீல் வீல்கள் கொண்ட இந்த புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் காரின் ‘ஏ' மற்றும் ‘பி' பில்லர்கள் பாடி கலரில் இடம்பெற்றுள்ளன.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

டூயல் டோன் நிறத்திலான உட்புறம் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. டேஷ்போர்ட் மற்றும் டோர் பேனல்களில் வுட் இன்லேஸ், ஃபேப்ரிக் வேலைபாடுகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

மேலும், இந்த புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் காரில் மேனுவல் ஏசி, பவர் விண்டோக்கள் எம்ஐடி யூனிட் கொண்ட இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் ஆகியவையும் உள்ளன.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

முந்தைய ஸ்விஃப் டிசையர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைத்து வந்தது, ஆனால் 2017 ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின்களிலும் கிடைக்கிறது.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இஞ்சின், அதிகபட்சமாக 74 பிஹச்பி ஆற்றலையும், 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

1.2 லிட்டர் கே-சீரீஸ் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 84 பிஹச்பி ஆற்றலையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

இரண்டு கார்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. ஆச்சரியமளிக்கத்தக்க வகையில் இரண்டிலுமே ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் 3 வண்ணங்களில் கிடைக்கிறது.

  • பேர்ல் ஒயிட் ( Pearl White)
  • சில்கி சில்வர் (Silky Silver)
  • மிட்னைட் பிளாக் (Midnight Black)
மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 162 கிமீ ஆகும். டேங்க் கொள்ளளவு 42 லிட்டர்கள் ஆக உள்ளது. பூட் ஸ்பேஸ் 316 லிட்டர்கள் ஆகும். காரின் மொத்த எடை 1050 கிலோவாக உள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

2017 ஸ்விப்ட் டிசையர் டூர் காரின் விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பெட்ரோல் வேரியண்ட் - ரூ. 5.24 லட்சம்.
  • டீசல் வேரியண்ட் - ரூ.5.99 லட்சம்.

(விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் அறிமுகம்..!

புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் பிரத்யேக டேக்ஸி மாடலாக வெளிவந்துள்ளதால் இதனை வணிக பதிவுடன் மட்டுமே வாங்கமுடியும் என்பது குறிப்பிடத்தகக்கது.

Via IAB

Most Read Articles

English summary
Readin Tamil about Maruti Suzuki Swift Dzire Tour car launch in india. price, mileage, specs and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X