புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் மற்றும் வேகன் ஆர் ஸ்டிங்ரே கார்களின் படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

By Saravana Rajan

இந்தியர்களின் மனம் கவர்ந்த பட்ஜெட் விலை கார் மாடல் மாருதி வேகன் ஆர். குறிப்பாக, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. மேலும், அதிக உயரம் கொண்டவர்கள் கூட எளிதாக அமர்ந்து செல்லும் டால்பாய் கான்செப்ட் வடிவமைப்பை கொண்டிருப்பதும் இதன் முக்கிய சிறப்பம்சம்.

இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காருக்கு எழுந்துள்ள சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக புதிய தலைமுறை வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்களை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தயாரித்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த புதிய மாடல் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த காரின் புரொச்சரில் இருந்த படங்களை ஜப்பானிய இணையதளம் ஒன்று படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறது.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் இருந்து புதிய தலைமுறை வேகன் ஆர் கார் வடிவமைப்பில் அதிக வேறுபாடுகளை தாங்கி வந்துள்ளது. வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே ஆகிய மாடல்களின் வெளிப்புறத்த தோற்றம் வெகுவாகவே மாறிப்போயுள்ளது.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

டால்பாய் கான்செப்ட் என்ற அட்டைப் பெட்டி போன்ற உயரத்தப்பட்ட கூரை அமைப்பிலேயே இந்த காரும் வந்துள்ளது. அடிப்படை டிசைன் தக்க வைக்கப்பட்டு அது எளிதில் தெரியாதவாறு அதிக மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பில் இரண்டடுக்கு க்ரில் மற்றும் ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு கீழே பெரிய ஏர்டேம் இடம்பிடித்துள்ளது. அதேநேரத்தில், பானட் அளவு குறைந்துள்ளது.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

பக்கவாட்டில் பி பில்லர் மேற்புறத்தில் கூரையை தொடாமல் குத்திட்டு நிற்பதுபோல் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. வலுவான வீல் ஆர்ச்சுகள், பாடி லைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சைடு மிரர்கள் ஏ பில்லருக்கு நேராக இல்லாமல் சற்றே பின்னுக்கு தள்ளி பொருத்தப்பட்டுள்ளது.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

பின்புற டிசைன் மிகவும் எளிமையாக இருக்கிறது. கூரையில் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்னால் வரும் வாகனங்களுக்கு எளிதில் தெரியும் வகையில், டெயில் லைட்டுகள் இடுப்புப் பகுதியில் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த புதிய மாடலில் பின்புற பம்பருக்கு மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் படுக்கை வாட்டில் இருக்கிறது. நம்பர் பிளேட் பம்பரில் இடம்பெற்று இருக்கிறது.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

இன்டீரியரிலும் அதிக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என தெரிகிறது. குறிப்பாக, டேஷ்போர்டு அமைப்பு சற்று தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கும் என நம்பலாம். அதேபோன்று, வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கும்.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

மறுபுறத்தில் வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் டிசைனில் வித்தியாசங்கள் காட்டப்பட்டுள்ளன. பெரிய அளவிலான ஒற்றை க்ரில் அமைப்பு, கவர்ச்சியான ஹெட்லைட், கச்சிதமான ஏர்டேம், பனிவிளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டிங்ரே காரின் பக்கவாட்டில் வித்தியாசங்கள் இல்லை. விற்பனைக்கு வரும்போதே முழுமையான படங்கள் மூலமாக டிசைன் வித்தியாசங்கள் தெரிய வரும்.

 புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் கசிந்தன!

ஜப்பானில் விற்பனைக்கு செல்லும் வேகன் ஆர் காரில் 660சிசி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்தியா வரும்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வரும். அடுத்த ஆண்டு இந்த புதிய தலைமுறை வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Images of the next generation WagonR and Stingray have leaked, giving us a peek at the new design of the vehicles.
Story first published: Thursday, January 5, 2017, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X