மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

Written By:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

ஆம், மிட்சுபிஷி இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி விரைவில் வருகிறது என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. எனவே, விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி உள்ளது. சில டீலர்களில் ரகசிய முன்பதிவும் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் முன்புற வடிவமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் முகப்பு வடிவமைப்பும், கூரை அமைப்பும் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இழு விசை மிக குறைவாக இருக்கும்.

மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

முகப்பில் இடம்பெற்றிருக்கும் வலுவான க்ரோம் பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பு மிரட்டலான தோற்றத்தை தருகிறது. நவீன காலத்துக்கு ஏற்ற புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வலிமையான பம்பரும் காரின் கம்பீரத்தை எடுத்து காட்டுகிறது.

மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் உட்புற வடிவமைப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது. சென்டர் கன்சோல் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்துடன் கவர்ச்சியாக இருக்கிறது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 169 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இறுக்கும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். பேடில் ஷிஃப்ட் வசதி, 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற அம்சங்களை பெற்றிருக்கும்.

மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

இந்த எஸ்யூவியில் ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

மிட்சுபிஷி இந்தியா இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி இடம்பெற்றது!

ரூ.29 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஃபோர்டு எண்டெவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

English summary
Mitsubishi India has listed the new Outlander SUV on its website giving rise to the speculation of its imminent launch in India.
Story first published: Tuesday, August 22, 2017, 17:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos