புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

Written By:

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்திய எஸ்யூவி பிரியர்களிடம் பிரபலமான மாடல் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட். தோற்றம், ஆஃப்ரோடு வல்லமைகளில் சிறப்பான இந்த எஸ்யூவிக்கு தனி ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

அடுத்த ஆண்டு மத்தியில் புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

மிட்சுபிஷி டிரைட்டான் பிக்கப் டிரக்கின் அடிப்படையில், புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது க்யூஎக்ஸ் மற்றும் க்யூஇ என்ற குறியீட்டுப் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயுடன் வர இருக்கிறது. வழக்கம்போல் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் வருவதுடன், பல கூடுதல் டிசைன் சிறப்புகளையும் பெற்றிருக்கும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய பானட் மற்றும் க்ரில் அமைப்பு மற்றும் முற்றிலும் புதிய டிசைனிலான முகப்புடன் வர இருக்கிறது. மேலும், புதிய க்ரில் அமைப்பு ஆழமான நீர்நிலைகளில் செல்லும்போது விண்ட்ஸ்க்ரீனில் தண்ணீர் படர்வதை தடுக்கும் வகையில் இருக்கும் என்று மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும் 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் சூப்பர் செலக்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் பெற்றிருக்கும். இது ஆஃப்ரோடு சாகசங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் இன்டீரியர் அமைப்பிலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் வர இருக்கிறது. புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் விலையும் கூடுதலாக நிர்ணயிக்கப்படும்.

English summary
Japanese automaker Mitsubishi will introduce the new Pajero Sport in the Indian market. Autocar India reports that the SUV will be launched in the country by summer next year.
Story first published: Monday, June 26, 2017, 15:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark