புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மும்பையில் உள்ள போர்ஷே சென்டரில் புதிய போர்ஷே 911 ஜிடி3 காரின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. போர்ஷே நிறுவனத்தினன் ரேஸ் பாரம்பரியத்தின் செறிவுடன் தயாரிக்கப்படும் மாடல்களில் ஒன்றான போர்ஷே 911 ஜிடி3 கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய போர்ஷே 911 ஜிடி3 கார் கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த கார் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு விசேஷ ஏரோடைனமிக்ஸ் பேக்கேஜை போர்ஷே வழங்குகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள், அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பாகங்களுடன் அசத்துகிறது. இந்த காரில் சென்ட்ரல் லாக்கிங் வீல் சிஸ்டமும் இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரில் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. போஸ் நிறுவனத்தின் சர்ரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம் இதன் மதிப்பை கூடுதலாக்குகிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு அடாப்டிவ் ஸ்போர்ட்ஸ் சீட்ஸ், பக்கெட் சீட்ஸ் மற்றும் மடக்கும் வசதியுடன் கூடிய பேக்ரெஸ்ட்டுடன் பக்கெட் சீட்டுகள் என மூன்று விதமான இருக்கை வசதி கொடுக்கப்படுகிறது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள் என பலவிதமான கோணங்களில் பாதுகாப்பு தருவதற்கான ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் பக்கத்திற்கு தலா 3 சிலிண்டர்கள் கொண்ட ப்ளாட் சிக்ஸ் சிலிண்டர் அமைப்புடைய 4.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎஸ் பவரையும், 460 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் போர்ஷே பிடிகே டபிள்யூ க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 0.5 வினாடி கூடுதலாக எடுத்துக் கொள்கிறது. ஆட்டோமேட்டிக் மாடல் மணிக்கு 318 கிமீ வேகம் வரையிலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் மணிக்கு 320 கிமீ வேகம் வரையிலும் செல்லும்.

புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜெர்மனியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படும் இந்த கார், இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.2.31 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche 911 GT3 launched in India. The Porsche 911 GT3 is priced at Rs 2,31,21,000 ex-showroom (India). The new Porshce 911 GT3 (991.2) was first unveiled earlier this year at the 2017 Geneva Motor Show.
Story first published: Monday, October 9, 2017, 15:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark