இரண்டு புதிய குர்கா சீரிஸ் எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

Written By:

இந்தியாவைச் சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ஆட்டொமொபைல் தயாரிப்பு நிறுவனமாகும். வேன் உற்பத்தியில் நாட்டிலேயெ முதலிடம் வகிக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ். டெம்போ, ட்ராவலர், ட்ராக்ஸ், மெடடார், மினிடார் போன்ற சில சிறந்த வாகனங்களை நாட்டிற்கு அளித்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

வேன்கள், டிராக்டர்கள், யுடிலிட்டி வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபோர்ஸ் நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ‘குர்கா' எனும் எஸ்யூவி வாகனத் தயாரிப்பில் களமிறங்கியது. குர்கா எஸ்யூவி ஒரு முழுமையான எக்ஸ்ட்ரீம் ஆஃப் டோடர் வெஹிகிளாகும். மஹிந்திராவின் தார் ஜீப்களுக்கு இவை போட்டியளித்து வருகின்றன.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

குர்கா சீரிஸில் தற்போது ‘எக்ஸ்பிளோரர்' மற்றும் ‘எக்ஸ்பெடிஷன்' என்ற இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம். புதிய மாடல்கள் இரண்டும் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சின்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

3 கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்பிளோரர் ஹார்டு டாப் மற்றும் சாஃப்ட் டாப் மேற்கூரை ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டிலுமே வலிமையான சி-இன்-சி சேஸிஸ் உள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

5 கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்பெடிஷன் மாடலில் ஹார்டு டாப் மேற்கூரை மட்டுமே உள்ளது. இந்த இரண்டு மாடல்களிளும் புதிய உயர்ரக சஸ்பெஷன், ஆல் வீல் டிரைவ், ஃபாக் லைட்டுகளுடன் கூடிய ஸ்டீல் பம்பர்கள் உள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

‘எக்ஸ்பிளோரர்' மற்றும் ‘எக்ஸ்பெடிஷன்' எஸ்யூவிக்கள் இரண்டிலுமே 4 சிலிண்டர்கள் கொண்ட 2.6 லிட்டர் டிசிஐசி காமன் ரெயில் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 85 பிஹச்பி ஆற்றலையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீடு கேபிள் ஷிஃப்ட் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

ஆஃப் ரோடிங்கின் போது சிறந்த டிரைவிங்கை அளிக்கும் விதமாக 4*2, 4*4 High அல்லது 4*4 Low என வீல் செட்டிங்குகளை இரண்டு ஆக்ஸில்களிலும் மாற்றிக்கொள்ளும் டிஃப்ரன்ஷியல் லாக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

இந்த எஸ்யூவிக்களில் இஞ்சினுக்கு காற்றை அனுப்பும் வகையில் மேற்கூரையில் ‘ஸ்னோர்கெல் இண்டேக்' வசதி அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் தண்ணீரில் செல்லும் போது இஞ்சினுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க இந்த அமைப்பு உதவுகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

மெர்சிடிஸ் ஜி-வேகன் காரை அடிப்படையாகக் கொண்டது இந்த எஸ்யூவிக்கள். இதில் உள்ள கேபிள் ஷிஃப்ட் கியர் பாக்ஸ் மென்மையான கியர் ஷிப்ட் அனுபவத்தை அளிக்கும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா சீரிஸ் மாடல் எஸ்யூவிக்கள் அறிமுகம்

3 கதவுகள் கொண்ட எக்ஸ்பிளோரர் ரூ.9.35 லட்சத்திற்கும், 5 கதவுகள் கொண்ட எக்ஸ்பெடிஷன் மாடல் ரூ.8.38 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கும். இந்த இரண்டுமே டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விமானங்களுக்கு வெள்ளை வண்ண பூச்சு கொடுக்கப்படுவதன் ரகசியம்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கும் வோல்வோ

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டேக்ஸி ஓட்டுநர்கள் சொந்தமாக உருவாக்கியுள்ள புதிய மொபைல் ஆப்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரான முதல் மின்சார ரயில்!!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இந்திய கார் சந்தையில் புதிதாக களமிறங்கும் பிரெஞ்சு நிறுவனம்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை...!!

டொயோட்டாவின் புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காரின் படங்களை காணலாம்...

டொயோட்டாவின் புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காரின் படங்களை காணலாம்...

English summary
Force Motors has revealed the new range of Xplorer and Xpedition for the Indian market. Both the models are now compliant with the new BS-IV emission norms.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark