புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகையில் பெரும் தாமதம்... காரணம்?

Written By:

எஸ்யூவி பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

கடந்த மாதம் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட இந்த இரண்டாம் தலைமுறை டஸ்ட்டர் ரெனோ மற்றும் அதன் துணை பிராண்டான டேஸியா என இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு செல்கிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

இந்த நிலையில், இந்த மாத இறுதியில் புதிய ரெனோ கேப்டூர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சூழலில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவியை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வந்தால், அது கேப்டூர் எஸ்யூவியின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ரெனோ கருதுகிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

ஏனெனில், டஸ்ட்டர் ஏற்கனவே இந்தியாவில் நன்மதிப்பை பெற்ற எஸ்யூவி பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனவே, புதிய டஸ்ட்டர் அறிமுகத்தை தள்ளிப்போடுவதற்கு ரெனோ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

இதன்மூலமாக, கேப்டூர் எஸ்யூவி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சற்று கால அவகாசமும், வாய்ப்பும் கிடைக்கும். மேலும், டஸ்ட்டர் எஸ்யூவியைவிட கேப்டூர் காரின் விலை அதிகம் நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

எனவே, டஸ்ட்டரையும் கொண்டு வந்தால், நிச்சயம் வாடிக்கையாளர் கேப்டூர் எஸ்யூவி மீது அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதனை மனதில் வைத்து கேப்டூர் அறிமுகத்திலிருந்து குறைந்தது ஓர் ஆண்டு இடைவெளி வைத்து புதிய டஸ்ட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

எனினும், வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய ரெனோ டஸ்ட்டர் காட்சிக்கு வைக்கப்படும். ஆனால், விற்பனை என்பது அடுத்த ஆண்டு முதல் பாதியில் இருக்காது என்பது தெரிய வருகிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

இரண்டு கார்களும் ஒரே பிளாட்ஃபார்மில், ஒரே எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. டஸ்ட்டர் எஸ்யூவி தோற்றத்தில் மிரட்டலாகவும், கேப்டூர் காரானது க்ராஸ்ஓவர் ஸ்டைலில் மென்மையான தோற்றம் கொண்ட மாடலாகவும் வர இருக்கிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் கவர்ச்சிகரமான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பானட் அமைப்புடன் வருகிறது. வலிமையான வீல் ஆர்ச்சுகளும், புதிய டெயில் லைட்டுகளும் சிறப்பு சேர்க்கின்றன. இதுதவிர, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை தாமதம்!

ரெனோ டஸ்ட்டர் வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. மேலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது இன்டீரியர் சுமார் என்ற பேச்சும் அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் புதிய ரெனோ டஸ்ட்டர் வருகை தள்ளி போவது டஸ்ட்டர் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Next-gen Renault Duster India Launch May get delayed.
Story first published: Monday, October 9, 2017, 11:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark