மிரட்டும் தோற்றம், மிளர்ச்சி தரும் செயல்திறனுடன் வெளிவரும் 8வது தலைமுறைக்கான ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம்!

Written By:

ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பான்டம் கார் வெளியாகியுள்ளது.

கார் தயாரிப்பில் 112 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட இந்நிறுவனம் பான்டம் காரை 14 வருடங்களுக்கு பிறகு மேம்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ஆடம்பர பயணங்களை தரும் முதன்மை வாகனங்களில் ஒன்றான பான்டம் காரின் தற்போதைய வடிவம் பல புதிய கட்டமைப்புகளை பெற்றுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் தளத்தில் தயாரிக்கப்பட்ட கார்களிலேயே, தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தில் மிகவும் மேம்பட்ட உருவாக்கமாக புதிய பான்டம் கார் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்காக இந்த காருக்கான வடிவமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் பிஸ்போக் அலுமனியம் ஸ்பேஸ்ஃபிராமால் தயாரான முதல் காரும் இதுவாகும்.

Recommended Video - Watch Now!
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ஆடம்பர பயணங்களை வழங்க பல மாடல் கார்கள் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் ஹென்றி ராய்ஸ் 1925ல் அறிமுகப்படுத்திய பான்டம் மாடல் கார் தான் ஆடம்பர பயணங்களுக்கான வரலாற்றை இந்த உலகில் அதிகளவில் பதிவு செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ஆடம்பர கார்களுக்கான வரிசையில் புதிய தலைமுறைக்கான வடிவமைப்புடன் வெளிவந்துள்ள முதல் கார் என்ற பெருமையையும் அடைகிறது பான்டம்.

உறுதி, இலகு, ஆற்றலுடன் கூடிய திறன் மற்றும் கூடுதலாக விரிவாக்கப்பட்ட வீல்பேஸ்,அதே வெளிக்கட்டமைப்பு என பான்டம் காரின் ஒவ்வொரு வடிவமைப்பும் கவனமீர்க்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பிற்கான இயக்குநரான ஜில்ஸ் டெய்லர் இதுகுறித்து பேசும்போது,

"ரோல்ஸ்ராய்ஸின் கடினமான உழைப்பு என்றால் அது பான்டம் தான். ஆடம்பரத்தின் பெயராக மட்டுமில்லாமல், இது ஒரு மேஜிக்கான படைப்பும் கூட"

"புதிய பான்டம் காரால் ரோல்ஸ் ராய்ஸின் வடிவமைப்பு திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தொடக்கம் என்று சொல்லலாம்".

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

2017 பான்டம் காரின் வடிவமைப்பின் நுணுக்கம் அந்த கிரில் தான் உள்ளது. மேலும் ரோல்ஸ் ராய்ஸின் முத்திரையான ஸ்பிரிட் ஆஃப் எக்டெஸ்டசி கூடுதலாக இந்த மாடலில் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

புகை படிந்த முகப்பு விளக்கு தோற்றத்துடன், பகல் நேரங்களில் இயங்கும் விளக்கும் இதில் இடம்பெற்றுள்ளது. 600 மீட்டர் தூரத்திலும் தெரியும் மேம்படுத்தப்பட்ட லேஸர் விளக்கு அமைப்பும் 2017 பான்டம் காரில் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

முன் பக்கம் சிறியளவில், அதனுடைய நீளம் கொஞ்சம் அதிகமாகவும் 2:1 கணக்கில் இதனுடைய தோற்றப்பொலிவு உள்ளது.

1950 மற்றும் 1960களில் ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார்களின் பின்பக்க தோற்றம் இந்த மேம்படுத்தப்பட்ட மாடலிலும் தொடருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ரோஸ் ராய்ஸ் பான்டம் காரில் இருக்கக்கூடிய அம்சங்கள் எல்லாம் தி கேலரி என்று குறிப்பிடப்படுகிறது.

டிரைவிங்கின் போது ஓட்டுநர் விழிப்புடன் இருக்கும் வசதி மற்றும் பனோரோமிக் பார்வை கொண்ட நான்கு கேமரா அமைப்புகள் உள்ளன.

இந்த கேமராக்கள் ஹெலிகாப்டர் வியூ, நைட் விஷன் மற்றும் விஷன் அசிஸ்ட் என நான்கு விதங்களில் செயல்படும்.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

பாதை சாரிகள் இருப்பதற்கான எச்சரிக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், இடிபாடுகள், டிராஃபிக், லேன் டிபார்ச்சர் மற்றும் மேன் மாற்றம் ஆகியவற்றுக்கான எச்சரிக்கையை குறிக்கும் தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

7 X 3 காட்சியமைப்புடன் கூடிய ஹெட்-அப் டிஸ்பிளே, வைஃபை ஹாட்ஸ்பாட் மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் என பல வசதிகளும் இந்த காரில் அடங்கி இருக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

6.75 லிட்டர் திறன் பெற்ற 2 டர்போசார்ஜர்களுடன் கூடிய வி12 பவர்டிரெய்ன் என்ற முற்றிலும் புதிய எஞ்சின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

இது 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேம்படுத்தப்பட்ட பான்டம் காரில் இசட்.எஃப் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

ரோல்ஸ் ராய்ஸின் புதிய 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானால் ஆடம்பர கார்களுக்கான தேவையை அது மாற்றியமைக்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் 8வது தலைமுறைக்கான பான்டம் கார் வெளியானது!

மேலும் தொடர்ந்து ஆடம்பர கார் தேவைகளில் ரோல்ஸ் ராய்ஸின் கொடி தொடர்ந்து மேலே பறக்கும் விதத்தில் தான் அதன் தயாரிப்புகள் உள்ளன.

English summary
Read in Tamil: Rolls Royce Motor Cars unveiled its much anticipated eighth-generation Phantom. Click for Details...
Story first published: Friday, July 28, 2017, 16:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark