புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

Written By:

கடந்த 2014ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் இந்தியாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தநிலையில், பல்வேறு நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் வெளியிடப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி விபரம் இப்போது வெளியாகி உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

அடுத்த மாதம் 10ந் தேதி புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா ஆக்டேவியா, கோடியாக், சூப்பர்ப் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் கூடுதல் பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது. புதிய ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு என ஃபோக்ஸ்வேகன் கார்களுக்குரிய நேர்த்தியான டிசைனில் கவர்கிறது. அதிக அளவில் க்ரோம் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

பழைய மாடலைவிட புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் அதிக வீல் பேஸ் கொண்டதாக இருப்பதால், உட்புறத்தில் இடவசதி சிறப்பாக மேம்பட்டிருக்கும் என்று கருதமுடியும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா கேம்ரி, ஸ்கோடா சூப்பர்ப், ஹோண்டா அக்கார்டு ஆகிய கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.

English summary
Now, Autocar India reports that Volkswagen will launch the eighth-generation Passat in India on October 10, 2017. The previous-gen model was discontinued in India in 2014.
Story first published: Wednesday, September 27, 2017, 10:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark