புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்க திட்டம்!

உலகின் அதி செயல்திறன் மிக்க புகாட்டி சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுகுறித்து விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Staff

மின்சார நுட்பத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அண்மையில் வால்வோ கார் நிறுவனம் மின்சார கார்களை ஓரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

ஃபோக்ஸ்வேகன், போர்ஷே, ஆடி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் மின்சார நுட்பத்தில் இயங்கும் கார் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், உலகின் அதிசெயல்திறன் மிக்க கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் புகாட்டி நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

ஆட்டோகார் இதழுக்கு பேட்டியளித்துள்ள புகாட்டி நிறுவனத்தின் தலைமை அதிகாரி வோல்ஃப்கேங் டர்ஹெய்மர்," மின்சார தொழில்நுட்பத்தை சிரோன் காரில் புகுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. அடுத்த தலைமுறை காரில் நிச்சயமாக மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பம் இருக்கும்," என்று கூறி இருக்கிறார்.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

இந்த தகவலின் மூலமாக, அடுத்த தலைமுறை புகாட்டி சிரோன் கார் மின்சார நுட்பத்துடன் வெளிவரும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த காருக்கான முழுமையான மின்சார தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

தற்போது புகாட்டி சிரோன் காரில் 8 லிட்டர் க்வாட் டர்போசார்ஜ்டு டபிள்யூ-16 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரையும், 1,600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் ஒரு டன் எடைக்கு 741 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என்ற விகிதாச்சார அளவை பெற்றிருக்கிறது.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

இந்த சக்திவாய்ந்த எஞ்சினுடன் கூடுதலாக மின் மோட்டார் துணையுடன் அதிக செயல்திறன் மிக்க கார் மாடலாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளை புகாட்டி மேற்கொண்டுள்ளது.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

"மின்சார நுட்பம் இல்லாமலேயே உலகின் மிகவும் செயல்திறன் வாய்ந்த கார் மாடலாக சிரோன் ஆட்டோமொபைல் உலகின் மகுடமாக விளங்குகிறது. இருப்பினும், மின்சார நுட்பத்தை புகுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது," என்றும் டர்ஹெய்மர் கூறி இருக்கிறார்.

சிரோன் காரின் ஹைப்ரிட் மாடலை உருவாக்கும் புகாட்டி !

இன்னும் 8 ஆண்டுகளுக்கு தற்போதைய புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் விற்பனையில் இருக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும், புகாட்டி சிரோன் ஹைப்ரிட் கார் வருவதற்கு இரண்டு தசாப்தங்கள் கூட பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
French supercar manufacturer Bugatti is planning to electrify the next- generation Chiron to enhance the performance. This was revealed by the company's Chief Executive, Wolfgang Durheimer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X