புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

Written By:

புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை பினின்ஃபரீனா நிறுவனம் வடிவமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

எஸ்யூவி தயாரிப்பில் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் மிக பிரபலமானதாக விளங்குகிறது. அதேபோன்று, கார் வடிவமைப்பில் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இந்த இரு நிறுவனங்களும் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

இந்த நிலையில், இந்த சகோதர பந்தத்தை பயன்படுத்தி, புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் வடிவமைப்புப் பணிகளை பினின்ஃபரீனா வசம் ஒப்படைத்துள்ளது சாங்யாங் மோட்டார்ஸ். இந்த தகவலை சாங்யாங் நிறுவனத்தின் சிஇஓ ஜோங் சிக் சோய் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி டி200 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடலை வடிவமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாகவும் சாங்யாங் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி வரும் 2021 அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி எந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுதல் இருக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்க இன்னும் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

தற்போதைய மாடல் சாங்யாங் லிவ்-2 கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜி4 ரெக்ஸ்டன் என்ற பெயரில் தென்கொரியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அங்கு வழங்கப்படுகிறது.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!

இந்த நிலையில், புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பொறுப்பு பினின்ஃபரீனாவிடம் சென்றுள்ளதால், நிச்சயமாக புதிய ரெக்ஸ்டன் வடிவமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஃபெராரி, பிஎம்டபிள்யூ என பல முன்னணி கார் நிறுவனஙகளின் புகழ்பெற்ற கார் மாடல்களை பினின்ஃபரீனா நிறுவனம்தான் உருவாக்கி கொடுத்துள்ளது.

Source: CarMagazine

மேலும்... #சாங்யாங் #ssangyong
English summary
CarMagazine reports that the Italian firm Pininfarina will design the next-gen Rexton.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark