அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் ஜீப்பில் என்ன விஷேசம்?

மகிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தார் ஜீப் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. அது குறித்த விரிவாக காணலாம்.

By Arun

ஆஃப் ரோடிங் பிரியர்களின் செல்ல வாகனமாக வலம் வருவது மகிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப்கள். இவை செயல்திறன், டிசைன், வலிமை, சொகுசு, தொழில்நுட்பம் என அனைத்தும் கொண்ட கலவையாக விளங்குவதால் இதற்கென பெரிய ரசிகர் வட்டமே இங்கு உள்ளது. தற்போது புதிய தலைமுறை தார் ஜீப்கள் வெளிவர உள்ளன.

 அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

2010ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம், எஸ்யுவி 4 வீல் டிரைவ் மாடலான ‘தார்' ஜீப்பை அறிமுகப்படுத்தியது. ஆஃப் ரோடிங் அனுபவத்தை வழங்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதே தார் ஜீப்கள். மிகவும் ஸ்டைலான தார் ஜீப்பில் மிடுக்காக வலம் வருவதை அந்தஸ்தின் அடையாளமாக பலரும் கருதுகின்றனர்.

 அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ஜீப்கள் 2015ஆம் ஆண்டில் சில மாறுதல்களோடு சந்தைப்படுத்தப்பட்டது. தற்போதுபுதிய தோற்றம் மற்றும் தொழில்நுட்ப மாறுதல்களுடன் மீண்டும் தார் ஜீப்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

‘தார்' பிரியர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் இச்செய்தி குறித்து மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா கூறும்போது, "மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு வாகன மாடல்களை உருவாக்கும் போதும், எங்களது பொறியாளர்கள் மட்டுமல்லாது, உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களான பினின்ஃபரினா, சாங்யோங் ஆகிய நிறுவனங்களிடமும் டிசைன் கேட்டுப்பெறுவோம்" என்றார்.

 அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

நடப்பில் உள்ள தார் மாடலில் உள்ள 2498சிசி டர்போசார்ஜ்டு சிஆர்டிஇ டீசல் எஞ்சின் கொண்டு அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் ஜீப் வெளிவரும். இந்த இஞ்சின் அதிகபட்சமாக 105 பிஹச்பி ஆற்றலையும், 247 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தார் ஜீப் டீசல் வேரியண்டாக கிடைக்கக்கூடிய நிலையில், சில வெளிநாட்டு சந்தைகளில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது. இது குறித்து இன்னும் மகிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

புதிய தலைமுறை தார் ஜிப்பில் மேலும் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதில் மொபைல் சார்ஜ் செய்ய வயர்லஸ் சார்ஜிங் வசதி, மெமரி சீட்கள், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே கணெக்டிவிட்டி ஆகிய வசதிகள் இடம்பெற உள்ளன.

அடுத்த தலைமுறை தார் ஜீப் பற்றிய தகவல்கள்!

மேலும், இதில் அசிஸ்டட் டிரைவிங் தொழில்நுட்பமும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை தார் ஜீப்களின் அறிமுகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

மஹிந்திரா தார் ஜீப்பின் படங்கள்:

Most Read Articles
English summary
Mahindra has confirmed the next generation Thar, that could feature a petrol engine and a host of features to make the vehicle feel upmarket.
Story first published: Thursday, March 2, 2017, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X