க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

Written By:

கடந்த ஜூலை மாதம் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

இந்த நிலையில், இந்த 6ம் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ காரை லத்தீன் என்சிஏபி அமைப்பு அண்மையில் க்ராஸ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இதில், புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் சிறப்பான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

2018 மாடலாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் லத்தீன் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

பெரியவர் மற்றும் சிறியவர் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் வேரியண்ட்டுகள் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

இந்த கார்களில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் முன்புறம், பக்கவாட்டு பகுதிகளின் கட்டுமானத் தரம், மோதலின்போது பாதுகாப்பு கருவிகள் பயணிகளை காக்கும் விதங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில், முன்புற மற்றும் பக்கவாட்டு மோதல்களின்போது, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் கட்டுமானம் மிகவும் சிறப்பாக இருப்பது தெரிய வந்தது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் கட்டுமானத்தில் சிறப்பான மாடல் என்ற நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. தற்போது வெளிவர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏஓ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

அதிக வீல் பேஸ் கொண்ட காராக மாறுதல் செய்யப்பட்டிருப்பதுடன், புதிய ஸ்டீயரிங் சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவிலும் இந்த புதிய மாடல் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், விலை சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் க்ராஷ் டெஸ்ட் வீடியோவை காணலாம்.

English summary
The 2018 Volkswagen Polo scored big with a 5-star rating in the NCAP crash test. The all-new Polo scored 5-stars for adult occupant protection as well as for child occupant protection.
Story first published: Wednesday, October 11, 2017, 10:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark