நிஸான் மற்றும் டட்சன் கார்களுக்கு சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு

Written By:

பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரை கவரும் வகையில், பல அதிரடி சேமிப்புச் சலுகைகளை நிஸான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது. நிஸான் மற்றும் டட்சன் பிராண்டு கார்களுக்கான சேமிப்புச் சலுகை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

நிஸான் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.71,000 வரையிலும், டட்சன் கார்களுக்கு ரூ.16,000 வரையிலும் சேமிப்பு பெறும் வாய்ப்பு இப்போது உள்ளது. கடந்த 5ந் தேதி முதலே கார் முன்பதிவு செய்பவர்கள் இந்த சலுகைகளை பெற முடியும். விரிவான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

அதிகபட்சமாக நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு ரூ.71,000 வரையில் சேமிப்பு சலுகைகளை பெற முடியும். நிஸான் மைக்ரா எம்சி காருக்கு அதிகபட்சமாக ரூ.39,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்ப்டடுள்ளன.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

மைக்ரா ஆக்டிவ் காருக்கு ரூ.34,000 வரை மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் போனஸ் ஆகியவை இதில் அடங்கும்.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

டட்சன் கோ ப்ளஸ் காருக்கு ரூ.16,000 சேமிப்புச் சலுகையை பெற முடியும். டட்சன் கோ காருக்கு ரூ.14,500 வரையிலும், ரெடிகோ 800சிசி மாடலுக்கு ரூ.13,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவசர இன்ஸ்யூரன்ஸ், கார்ப்பரேட் ஆஃபர் இதில் அடங்கும்.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

மேலும், நிஸான் மற்றும் டட்சன் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க காசு வழங்கப்படும். அத்துடன், பண்டிகை கால சலுகையாக 7.99 சதவீதம் என்ற மிக குறைவான வட்டி விகிதத்தில் நிஸான் - ரெனோ நிதி நிறுவனத்தின் மூலமாக கடன் வசதியும் பெற முடியும்.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

வரும் 19ந் தேதிக்குள் நிஸான் அல்லது டட்சன் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் காரை வெல்லும் வாய்ப்பும் உள்ளதாக நிஸான் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.71,000 வரை கார்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் நிஸான்!

டட்சன் ரெடிகோ காரை வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.6,000 தள்ளுபடி தருவதாகவும் நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள நிஸான் நிறுவனத்தின் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has announced a host of lucrative festive offers for new cars of Nissan and Datsun models. The offers from Nissan and Datsun can be availed from September 5, 2017, onwards.
Story first published: Saturday, September 9, 2017, 11:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark