தாகத்தில் தவிக்கும் தமிழகத்திற்கு 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து தந்த நிஸான் இந்தியா..!!

Written By:

இந்தியாவின் நிஸான் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கான விவரங்களை கீழே படியுங்கள்.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

கார் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் பல, மின்சார கார் மற்றும் அவற்றுக்கு நீண்ட ஆயுள் தரும் பேட்டரிகள் போன்றவற்றை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

இதுபோன்ற முன்னோடி சிந்தனைகளுக்கு இந்திய நிஸான் நிறுவனம் எப்போதோ விதிட்டு விட்டது. அது தான் நுரைகள் மூலம் கார்களை கழுவும் தொழில்நுட்பம்.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

இதில் என்ன புதிது என்று நீங்கள் நினைக்கலாம். 2014ம் ஆண்டில் இந்த வழிமுறையை நிஸான் அறிமுகப்படுத்திய போது பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் அப்படி தான் நினைத்தன.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

ஆனால் இந்த புதிய அணுகுமுறை தான் இன்று இந்தியாவில் இயங்கும் நிஸான் நிறுவனத்திற்கு உலக அடையாளத்தை வழங்கியுள்ளது.

சர்வீஸ் மையங்களுக்கு கார்கள் செல்லும் போது, அவற்றை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்ய கிட்டத்தட்ட 160 லிட்டர் தண்ணீர் செலவாகும்.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

ஆனால் நிஸானின் நுரைகள் மூலம் கார் கழுவும் முறையால் ஒரு காருக்கு சுமார் 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை. இதன் மூலம் 45 சதவீத அளவில் கார் கழுவும் போது தண்ணீர் மிச்சமாகிறது.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

நுரைகள் மூலம் கார் கழுவும் இந்த வழிமுறை அறிமுகமான பிறகு, 2014 தொடங்கி தற்போது வரை நிஸான் நிறுவனம், ஒரு நாளில் 25,000 இந்தியக் குடும்பங்களுக்கு தேவைப்படும் தண்ணீரை சேமித்துக்காட்டி அசத்தியுள்ளது.

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பார்க்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை குறித்து பேசிய இந்திய நிஸான் நிறுவனத்தின் துணைத்தலைவரான சஞ்சீவ் அகர்வால்,

"வாடிக்கையாளர்களின் மனம் கருதி எப்போதும் புதுமை நாடுவது தான் நிஸான் இந்தியாவின் விருப்பம். அவற்றுடன் சுற்றுச்சூழல் குறித்த எண்ணமும் எங்களுக்கு இருப்பதை இதன் மூலம் செய்துகாட்டியுள்ளோம்" என்று கூறுகிறார்

61 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தியாவிற்கு சேமித்து தந்த நிஸான்

இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நீரின்றி தற்போது தாகத்தில் தவித்து வருகின்றன. இதில் தமிழகம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கும் நிஸான் நிறுவனம், தண்ணீரை சேமிக்க உருவாக்கியுள்ள இந்த புதிய வழிமுறை நிச்சயம் பாராட்டத்தக்கது.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan’s Foam Car Wash Saves 6.1 Million Liters Of Water In India. Click for Details...
Story first published: Saturday, June 10, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark