இந்தியாவில், பயன்படுதத்தப்பட்ட கார் வர்த்தகத்தில் குதித்த நிஸான் கார் நிறுவனம்!

Written By:

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான பிரத்யேக வர்த்தக பிரிவை இந்தியாவில் துவங்கி இருக்கிறது நிஸான் கார் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

நிஸான் இன்டெலிஜென்ட் சாய்ஸ் என்ற பெயரில் யூஸ்டு கார் வர்த்தக நிறுவனத்தை நிஸான் துவங்கி இருக்கிறது. இந்த புதிய நிறுவனம் வாயிலாக அனைத்து பிராண்டுகளின் யூஸ்டு கார்களை நிஸான் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

தங்களது பழைய கார்களை மாற்றி புதிய நிஸான் அல்லது டட்சன் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் கார்கள் இந்த நிறுவனம் மூலமாக விற்பனை செய்யப்படும்.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கப்படும் அனைத்து எக்ஸ்சேஞ்ச் கார்கள் அனைத்தும் 167 விதமான தர பரிசோதனைகளுக்கு பின்னர், விற்பனைக்கு செல்லும்.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

பழுதுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், யூஸ்டு கார் வாங்க விரும்புவோர் மன நிம்மதியுடன் இந்த கார்களை வாங்க முடியும்.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

நிஸான் இன்டெலிஜென்ட் சாய்ஸ் மூலமாக விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு நிஸான் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி மூலமாக கடன் உதவி திட்டங்களும் செய்து தரப்படும். காரின் மதிப்பில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

பயன்படுத்தப்பட்ட கார் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேர அவசர கால உதவி திட்டத்தையும் எந்த கட்டணமும் இல்லாமல் செய்து தர இருப்பதாகவும், கவர்ச்சிகரமான வாரண்டி திட்டங்களையும் வழங்குவதாக நிஸான் தெரிவித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வர்த்தக பிரிவை துவங்கியது நிஸான்!

முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், கொல்கத்தா, கவுகாத்தி, ஜெய்ப்பூர், லூதியானா, லக்ணோ, ஆமதாபாத், மும்பை மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் நிஸான் இன்டெலிஜென்ட் சாய்ஸ் நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை மையங்கள் துவங்கப்பட உள்ளன.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has launched its pre-owned car business - Nissan Intelligent Choice in India. It is designed for customers looking for quality tested and certified pre-owned cars with optimum value.
Story first published: Friday, September 29, 2017, 12:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark