அடுத்து ஒரு புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்!

Written By:

எஸ்யூவி கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், பல புதிய மாடல்கள் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிஸான் நிறுவனமும் ஒரு புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

நிஸான் நிறுவனம் தனது கிக்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளிலும் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

கடந்த ஆண்டுதான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. நம் நாட்டு மார்க்கெட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிஸான் டெரானோ உள்ளிட்ட மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த கிக்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

அதேநேரத்தில், புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது, டெரானோ எஸ்யூவியைவிட அதிக விலை கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும். விரைவில் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் ரெனோ கேப்டர் எஸ்யூவிக்கு நிகரான ரகத்தில் வரும் என்பது தகவல்.

Recommended Video
Tata Nexon Review: Specs
புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

ரெனோ கேப்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் அல்லது 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் டிசைன் கிக் ஏற்றும் விதத்தில் இருக்கும். குறிப்பாக, இரட்டை வண்ண வெளிப்புறம் வெகுவாக கவரும். உட்புறத்திலும் இரட்டை வண்ண கலவை பயன்படுத்தப்பட்டிருக்கும். தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். சிறப்பான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

அடுத்த ஆண்டு நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் நிஸான் நிறுவனம் பங்கேற்கவில்லை. எனவே, இந்த எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. பின்னர், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வருகிறது!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனோ கேப்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியை தரும்.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Japanese automaker Nissan has commenced working on its next major product for the Indian market.
Story first published: Tuesday, August 22, 2017, 16:38 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos