நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

பண்டிகை காலம் துவங்கியுள்ளதையடுத்து, கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த தேர்வை அளிக்கும் விதத்தில் கார், பைக்குகளின் விசேஷ பதிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், நிஸான் மைக்ரா காரின் சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

நிஸான் மைக்ரா ஃபேஷன் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இத்தாலியை சேர்ந்த பிரபல பெனிட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கார் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நிஸான் மைக்ரா காரின் எக்ஸ்எல் சிவிடி வேரியண்ட்டின் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களுடன் வெளிப்புறம் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, ரியர் வியூ மிரர்களும் ஸ்டிக்கர் மூலமாக அலங்காரமாக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு வீல் கவர்கலில் ஆரஞ்ச் வண்ணம் தீட்டப்பட்டு கவர்ச்சியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஃபேஷன் பிளாக் மற்றும் ஃபேஷன் ஆரஞ்ச் என்ற இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

உட்புறத்தில் பியானோ பிளாக் என்ற பளபளக்கும் கருப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல பாகங்கள் ஆரஞ்ச் வண்ண அலங்காரத்தில் கவர்கின்றன. இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டில் பெனிட்டன் நிறுவனத்தின் அடையாள சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

முதல்முறையாக நிஸான் மைக்ரா காரில் 6.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ஆடியோ விஷுவல் நேவிகேஷன் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

நிஸான் மைக்ரா ஃபேஷன் எடிசன் மாடலை முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு பெனிட்டன் நிறுவனத்தின் பெல்ட் மற்றும் பர்ஸ் போன்ற உயர்தர பொருட்கள் அடங்கிய பரிசுப் பையும் வழங்கப்படும்.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

நிஸான் மைக்ரா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக இந்த கார் கிடைக்கும். இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜ் தரும்.

நிஸான் மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

நிஸான் மைக்ரா ஃபேஷன் எடிசன் மாடல் ரூ.6.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது தனித்துவமான தேர்வாக இருக்கும்.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Micra Fashion Edition launched in India. The new Nissan Micra Fashion Edition is priced at Rs 6.09 lakh ex-showroom (Delhi).
Story first published: Wednesday, September 13, 2017, 10:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark