மேம்படுத்தப்பட்ட புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்.. முழு தகவல்கள்..!!

Written By:

கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 மைக்ரா காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது நிசான் நிறுவனம்.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

நிசான் நிறுவனத்தின் பிரீமியம் காம்பாக்ட் ஹேட்ச்பெக் மாடலான ‘மைக்ரா' சிறந்த டிசைன் மற்றும் ஆற்றல் கொண்ட ஒரு காராகும். இது அதன் செக்மெண்டில் சிறந்த விற்பனையாகும் மாடலாகவும் விளங்குகிறது.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஜப்பானிய தொழில்நுட்பத்தையும், ஐரோப்பிய டிசைன் தத்துவங்களையும் இணைத்து நிசான் மைக்ரா கார் உருவாக்கப்பட்டுள்ளதாக நிசான் மோட்டார்ஸ் இந்தியாவின் தலைவர் அருண் மல்கோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிதாக அறிமுகமாகியுள்ள 2017 நிசான் மைக்ரா காரை பொருத்தவரையில், முந்தைய மாடலில் இருந்து டிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் எந்த மாற்றங்களும் இல்லை.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதில் கூடுதலாக ஆட்டோமேடிக் ஹெட்லைட்டுகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உட்பட ‘லீட் மீ டூ கார்' என்ற புதிய தொழில்நுட்ப அம்சம் ஒன்றும்புகுத்தப்பட்டுள்ளது.

 புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

காரின் ஸ்மார்ட் கீயில் உள்ள இந்த பட்டனை பயன்படுத்தும் போது, காரை பார்க்கிங் செய்த இடத்திற்கு அது நம்மை வழிநடத்திச் செல்கிறது.

 புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

புதிய 2017 மைக்ரா காரின் உட்புறம் ஐரோப்பிய கருப்பு தீம் மற்றும் பியானோ பிளாக் ஃபினிஷிங் பெற்றுள்ளது.

 புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

சீட்கள், கியர் லீவர், டேஷ்போர்ட், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட சில இடங்களில் ஆரஞ்சு வண்ணத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது.

 புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

இதே போல இந்தக் காரில் ஸ்டீரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, 2-DIN ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது

 இஞ்சின்

இஞ்சின்

2017 நிசான் மைக்ரா கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின் ஆஃப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 73 பிஹச்பி ஆற்றலையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதே போல இதன் 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 63 பிஹச்பி ஆற்றலையும், 160 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

புதிய நிசான் மைக்ரா காரின் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 19.35 கிமீரும், டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 23.08 கிமீ மைலேஜும் தருகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மேம்படுத்தப்பட்ட நிசான் மைக்ரா கார் 7 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை

 • பிரிக் ரெட் (Brick Red)
 • டர்ஃகைஸ் புளூ (Turquoise Blue)
 • பிளேடு சில்வர் (Blade Silver)
 • ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black)
 • நைட்ஷேட் (Nightshade)
 • ஸ்டார்ம் ஒயிட் (Storm White)
 • சன்ஷைன் ஆரஞ்சு (Sunshine Orange)
வேரியண்ட் மற்றும் விலை விபரம்

வேரியண்ட் மற்றும் விலை விபரம்

புதிய நிசான் மைக்ரா கார் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 • எக்ஸ்எல் பெட்ரோல் (சிவிடி) - ரூ.5.99 லட்சம்
 • எக்ஸ்எல் டீசல் - ரூ.6.62 லட்சம்
 • எக்ஸ்வி பெட்ரோல் (சிவிடி) - ரூ.6.95 லட்சம்
 • எக்ஸ்எல் கம்ஃபர்ட் டீசல் - ரூ.7.26 லட்சம்
புதிய 2017 நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் 2010ல் அறிமுகமான நிசான் மைக்ரா கார் இதுவரை 80,000 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி சுசுகி ஃஸ்விப்ட் ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about new 2017 nissan micra launched in india. price, mileage, specs and more
Story first published: Saturday, June 3, 2017, 7:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark