மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

Written By:

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக நிஸான் டெரானோ எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லாமல் விற்பனையில் இருக்கிறது.

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் 22 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய நிஸான் டெரானோ எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்ந்து கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

மேற்சொன்னதுபோல் வெளிப்புறத்தில் மிகச் சிறிய அளவிலான மாற்றங்களும், உட்புறத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கூடுதல் சிறப்பம்சங்களும் இடம்பெற்று இருக்கின்றன. மென்மையான உணர்வை தரக்கூடிய உயர்தர சாஃப்ட் டச் டேஷ்போர்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல், இரட்டை வண்ணத்தில் புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், கதவுகளின் உட்புறத்தில் க்ரோம் அலங்கார பேனல்கள் கொடுக்கப்பட்டு இருப்பது, இந்த காரின் அந்தஸ்தை உயர்த்துகிறது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியில் 7 இன்ச் திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகளும் இருக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

ஹில் க்ளைம்ப் அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியில் இடம்பெற்று இருக்கின்றன. புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியில் ஓட்டுனருக்கான ஆர்ம் ரெஸ்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியில் 103 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மாடலிலும், 108 பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய மற்றொரு மாடலிலும் கிடைக்கிறது. டீசல் மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, தற்போது 108 பிஎச்பி பவரை அளிக்கும் டீசல் மாடல் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியில் அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்வதற்கான எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டியூவல் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தரமாக இடம்பெற்று இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

சான்ட்ஸ்டோன் என்ற புதிய வண்ணத்திலும் இனி புதிய நிஸான் டெரானோ கிடைக்கும். எல்இடி பகல்நேர விளக்குகள் போன்ற இதர ஆக்சஸெரீகளை கூடுதலாக பெற்றுக் கொள்ள முடியும். பம்பர் சற்றே மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகள் அறை க்ரோம் அலங்காரத்துடன் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. புதிய அலாய் வீல்களும் சிறப்பு சேர்க்கின்றன.

மேம்படுத்தப்பட்ட நிஸான் டெரானோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய நிஸான் டெரானோ எஸ்யூவி ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.95 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Read in Tamil: Nissan Terrano launched in India. The new Nissan Terrano comes with 22 new features including an AMT gearbox.
Story first published: Monday, March 27, 2017, 14:31 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark