பீஜோ 3008 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது... க்ரெட்டாவுக்கு போட்டி!

Written By:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்குவதை உறுதி செய்துள்ளது. சிகே பிர்லா குழுமத்தின் கூட்டணியுடன் வரும் 2020ம் ஆண்டில் வர்த்தகத்தை துவங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

பீஜோ மற்றும் சிகே பிர்லா ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, சிகே பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் மோட்டார் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் பீஜோ கார்களின் விற்பனை பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

சிகே பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் மற்றொரு நிறுவனமான AVTEC நிறுவனம் பீஜோ கார்களுக்கான பவர்ட்ரெயின் என்று சொல்லப்படும் எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் உதிரிபாகங்களை சப்ளை செய்ய இருக்கிறது. உள்ளூர் உதிரிபாகங்களை பயன்படுத்துவதன் மூலமாக மிக சவாலான விலையில் பீஜோ கார்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்திய தட்பவெப்பம் மற்றும் சாலை நிலைகளில்பீஜோ கார்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொண்டு மாற்றங்களை செய்யும் நோக்கில், ஏற்கனவே சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்ப்டடு வருகின்றன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்த நிலையில், இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் அதீத வரவேற்பை மனதில் வைத்து முதலாவது மாடலாக தனது 3008 எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பீஜோ- சிகே பிர்லா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக ஓவர்ட்ரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்த புதிய மாடலின் வடிவமைப்பு மிக மிக கவர்ச்சிகரமாக இருக்கும். மேலும், ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு நேர் போட்டியாளராக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்த புதிய பீஜோ 3008 எஸ்யூவியில் மிக வித்தியாசமாகவும், தனித்துவமான டிசைனிலான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. க்ரோம் அலங்கார க்ரில் அமைப்பு, பெரிய அளவிலான ஏர் டேம் போன்றவையும் காரின் முகத்தை கவர்ச்சிகரமானதாக காட்டுகின்றன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்த காரின் புதிய ஜிடி லைன் மற்றும் ஜிடி வேரியண்ட்டுகளில் இரட்டை புகைப்போக்கி குழல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு வண்ணக் கலவையிலான வெளிப்புறம், 19 அங்குல அலாய் வீல்கள் போன்றவை இந்த காரின் கவர்ச்சியை கூட்டும் விஷயங்கள்.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

இந்த காரின் இன்டீரியரும் மிக பிரிமியமாக இருக்கின்றன. பீஜோ நிறுவனத்தின் புதிய ஐ-காக்பிட் என்ற விசேஷ ஓ்டடுனர் இருக்கை மற்றும் தகவல் அளிக்கும் சாதனங்கள் போட்டியாளர்களைவிட ஒருபடி மேலே நிறுத்தும். இந்த காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

புதிய பீஜோ 3008 எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. பானோரமிக் சன்ரூஃப் மற்றும் சூடுபடுத்தும் வசதியுடன் முன்புற இருக்கைகள் போன்றவையும் இந்த காரில் இடம்பெற்று இருக்கின்றன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

புதிய பீஜோ 3008 எஸ்யூவியில் 130 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 97 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த ஒரு மாடலிலும், 118 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மாடலிலும் கிடைக்கும். ஜிடி லைன் மாடலில் புளூஎச்டிஐ டீசல் எஞ்சினும், ஜிடி மாடலில் 2.0 லிட்டர் புளூஎச்டிஐ 180 எஸ் அண்ட் எஸ் எஞ்சினும் இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக அட்டகாசமான எஸ்யூவியை களமிறக்கும் பீஜோ!

விலையை சவாலாக நிர்ணயிக்கும் பொருட்டு, சர்வதேச அளவில் வழங்கப்படும் சில பிரிமியம் வசதிகள் இந்திய மாடலில் கொடுக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிகளுக்கு போட்டியான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #பீஜோ #peugeot
English summary
Overdrive reports that the first offering from the automaker is likely to be an SUV, the 3008. By looking at the images, the SUV looks premium and big at the same time.
Story first published: Saturday, September 30, 2017, 10:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark