பீஜோ கார்கள் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் கார்களை களமிறக்க உள்ளது பீஜோ கார் நிறுவனம்.

By Saravana Rajan

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சி எடுத்து வருகிறது. குஜராத்தில் ஆலை அமைத்து கார் உற்பத்தியை துவங்க திட்டமிட்ட அந்த நிறுவனம், அந்த திட்டத்தை தடாலடியாக விலக்கிக் கொண்டது.

மீண்டும் இந்தியாவில் களம் காண வரும் பீஜோ கார்கள்!

இந்த நிலையில், சிகே பிர்லா குழுமத்தின் ஒத்துழைப்புடன் மீண்டும் இந்திய கார் சந்தையில் களம் காண முடிவு செய்துள்ளது பீஜோ கார் நிறுவனம். சிகே பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் அவ்டெக் என்ற நிறுவனம் பீஜோ நிறுவனத்தின் கார்களுக்கான எஞ்சின்களை தயாரித்து வழங்கி வருகிறது.

மீண்டும் இந்தியாவில் களம் காண வரும் பீஜோ கார்கள்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யூரோ-6 மாசு உமிழ்வு தர அம்சம் கொண்ட பெட்ரோல் எஞ்சின் ஒன்றையும், டீசல் எஞ்சின் ஒன்றையும் அவ்டெக் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த இரண்டு எஞ்சின்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பீஜோ கார்களில் இடம்பெற இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் இந்தியாவில் களம் காண வரும் பீஜோ கார்கள்!

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 1,999சிசி திறன் கொண்ட டீசல் எஞ்சின் வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 174 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது. மிகச் சிறந்த டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த எஞ்சின் எஸ்யூவி ரக கார்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். எனவே, எஸ்யூவி மாடல் ஒன்றை பீஜோ இந்திய சந்தையில் களமிறக்கும் வாய்ப்புள்ளது.

மீண்டும் இந்தியாவில் களம் காண வரும் பீஜோ கார்கள்!

அதேபோன்று, 1,200சிசி பெட்ரோல் எஞ்சின் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்ரோல் எஞ்சின் 128 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். எனவே, இந்த செக்மென்ட்டிலும் பீஜோ கார்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

மீண்டும் இந்தியாவில் களம் காண வரும் பீஜோ கார்கள்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார் மாடல்கள் குறித்த விபரத்தை பீஜோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், பீஜோ 301 செடான் கார் மாடல் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. இந்த கார் மிட்சைஸ் செடான் கார் மாடல்களுடன் போட்டி போடும். பீஜோவின் பிரபல க்ராஸ்ஓவர் ரக கார் மாடல்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Most Read Articles
English summary
Both the petrol and diesel powertrains from Peugeot are Euro 6 compliant.
Story first published: Wednesday, February 1, 2017, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X